நான்காவது ஸ்டெம்ப் எங்கிருந்து வந்தது? மிகப்பெரிய மர்மத்திற்கு விடை கிடைத்தது

டிஆர்எஸ்ஸுக்காக காட்டப்பட்ட ரிப்ளேவில் நான்கு ஸ்டம்ப் காட்டப்பட்டது தெரிய வந்தது. அந்த பந்து நான்காவது ஸ்டம்ப் ஒன்றை கடந்து செல்வது போல ரிவ்யூவில் காட்டப்பட்டது.

நான்காவது ஸ்டெம்ப் எங்கிருந்து வந்தது? மிகப்பெரிய மர்மத்திற்கு விடை கிடைத்தது

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்திற்கு செய்யப்பட்ட ரிவ்யூவில் நான்காவது ஸ்டம்ப் தோன்றியது எப்படி என்று விவரம் வெளியாகி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவு கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்திற்கு செய்யப்பட்ட ரிவ்யூ ஒன்றில் நான்காவது ஸ்டம்ப் ரிப்ளேவில் காட்டப்பட்டது. 

இந்திய வீரர் அஸ்வின் பவுலிங்கில் ஸ்மித் எல்பிடபிள்யூ ஆவது போல தெரிந்தது. ஆனால் இதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதையடுத்து இந்திய அணி உடனே ரிவ்யூ கேட்டது.

இந்த ரிவ்யூவில் பந்து ஸ்டம்பை தொடாமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரிவ்யூவில் அவுட் கொடுக்கப்படவில்லை. இது உண்மையில் விக்கெட் இல்லை என்பதால், இதில் எந்த விதமான மோசடியும் நடக்கவில்லை. ஆனால் இதில் நான்காவது ஸ்டம்ப் ஒன்று தோன்றியதுதான் பெரிய சர்ச்சையானது.

டிஆர்எஸ்ஸுக்காக காட்டப்பட்ட ரிப்ளேவில் நான்கு ஸ்டம்ப் காட்டப்பட்டது தெரிய வந்தது. அந்த பந்து நான்காவது ஸ்டம்ப் ஒன்றை கடந்து செல்வது போல ரிவ்யூவில் காட்டப்பட்டது. இப்படி நான்காவது ஸ்டம்ப் தோன்றியது எப்படி என்று பெரிய அளவில் கேள்விகள் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பொதுவாக டிஆர்எஸ் சோதனை செய்ய ஸ்டம்பின் முன் பக்கம் மற்றும் பின்பக்கம் இருக்கும் கேமராக்கள் சோதனை செய்யப்படும். இரண்டையும் ஒன்றாக அலைன் செய்து அதை வைத்து வீடியோவை உருவாக்கி, பின் பந்து எப்படி செல்கிறது என்று சோதனை செய்வோம்.

ஆனால் இப்படி கேமராவை மேர்ஜ் செய்த போது இமேஜ் லேசாக சிதறி இப்படி நான்கு ஸ்டம்ப் இருப்பது போல கட்சி பிழை உருவானது. இது முழுக்க முழுக்க தொழிநுட்ப கோளாறு. 

ஆனால் இதிலும் ஸ்டம்ப்பிற்கு வெளியே பந்து சென்றதால், இது விக்கெட் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதில் எதுவும் மோசடி நடக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.