வலியில் துடித்த அஸ்வின்.. ஈவு இரக்கமே காட்டாமல் கத்திய ஆஸி. கேப்டன்!

இந்திய அணி சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்ததால் ஆஸ்திரேலியா வெறுப்பில் உள்ளது. போட்டியை டிரா செய்ய அஸ்வின், ஹனுமா விஹாரி போராடி வந்த போது காயம் அடைந்தனர்.

வலியில் துடித்த அஸ்வின்.. ஈவு இரக்கமே காட்டாமல் கத்திய ஆஸி. கேப்டன்!

இந்திய அணி சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்ததால் ஆஸ்திரேலியா வெறுப்பில் உள்ளது. போட்டியை டிரா செய்ய அஸ்வின், ஹனுமா விஹாரி போராடி வந்த போது காயம் அடைந்தனர். அதனால், அவர்கள் தயாராகி மீண்டும் போட்டியில் பங்கேற்க தாமதம் ஆனது.

அப்போது அந்த கால தாமதத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின், அவர்களை வேகமாக வந்து பேட்டிங் செய்யுமாறு ஈவு இரக்கமே இன்றி கூறினார். 

அது பெரும் அதிர்ச்சி அளித்தது. அதற்கு பதிலடியாக அவர்கள் இருவரும் கடைசி வரை நின்று போட்டியை டிரா செய்தனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எந்த அணி வென்றாலும் தொடரில் 2 - 1 என முன்னிலை பெறலாம். 

குறைந்தபட்சம் தொடரை இழக்கும் வாய்ப்பை தவிர்க்கலாம். இந்த நிலையில் தன் ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு 409 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது.

இந்தியா மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து இருந்தது, ஐந்தாம் நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு 309 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது இந்தியா. 

எப்படியும் இந்திய அணியின் மீதமுள்ள எட்டு விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெறலாம் என எண்ணியது ஆஸ்திரேலியா.

புஜாரா, ரிஷப் பண்ட் இருவரும் அரைசதம் அடித்து இந்தியா வெற்றியை நோக்கி செல்வதாக பயமுறுத்தினர். 

ஆனால், பண்ட் 97 ரன்களிலும், புஜாரா 77 ரன்களிலும் ஆட்டமிழக்கவே போட்டி ஆஸ்திரேலியா வசம் சென்றது. ஆனால், அப்போது களமிறங்கிய ஹனுமா விஹாரி, அஸ்வின் டிரா செய்ய முடிவு செய்தனர்.

இருவருக்கும் பேட்டிங் செய்த போது காயம் ஏற்பட்டது. அதனால், அடிக்கடி இந்திய அணி பிசியோதெரபிஸ்ட் அவர்களுக்கு உதவி செய்ய வந்தார். 

அதனால் கால தாமதம் ஆனது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின் எரிச்சலில் இருந்தார்.

அவர், ஒரு கட்டத்தில் அஸ்வின் வலியில் துடித்த போது, "இது ரொம்ப மோசம். சீக்கிரம் வாருங்கள். சீரியஸாக சொல்கிறேன்" என பொங்கினார். 

அது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் டிம் பெயினை இந்த தொடரோடு அணியை விட்டே நீக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.