சென்னை மைதானத்தில்.. ஓரமாக கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்த ரஹானே.. உருக்கமான கதை!

இதனால் ரஹானே மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. முக்கியமாக கடந்த 8 போட்டிகளில் ரஹானே சரியாக ஆடவில்லை என்று புகார் வைக்கப்பட்டது.

சென்னை மைதானத்தில்.. ஓரமாக கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்த ரஹானே.. உருக்கமான கதை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துணை கேப்டன் ரஹானே அரைசதம் அடித்துள்ளார்.

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அதிரடியாக நடந்து கொண்டு இருக்கிறது. புஜாரா, சுப்மான் கில், கோலி ஆகியோர் மோசமாக ஆடி ஏமாற்றம் அளித்தனர்.

அதிலும் கோலி, கில் டக் அவுட் ஆகி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இதில் தொடக்கத்தில் திணறிய அணி தற்போது அதிரடி காட்ட தொடங்கி உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துணை கேப்டன் ரஹானே அரைசதம் அடித்துள்ளார். முதல் டெஸ்டில் இவர் ஸ்பின் பவுலர்களையும், ரிவர்ஸ் ஸ்விங் பவுலர்களையும் எதிர்கொள்ள முடியாமல் அவுட் ஆனார். இதனால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.

இதனால் ரஹானே மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. முக்கியமாக கடந்த 8 போட்டிகளில் ரஹானே சரியாக ஆடவில்லை என்று புகார் வைக்கப்பட்டது. இணையத்தில் ரஹானேவிற்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

எப்போதும் சாந்தமாக பேசும் ரஹானேவே கடந்த முறை பிரஸ் மீட்டில் இது தொடர்பான கேள்விக்கு கோபமாக பதில் அளித்தார். என்னுடைய கடந்த 10-15 போட்டிகளை பார்த்தால் நான் எவ்வளவு ரன் எடுத்தேன் என்று உங்களுக்கு தெரியும். இந்திய அணியில் நிறைய கலவையான, திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். நான் சரியாகவே ஆடி வருகிறேன்.

என்னுடைய பழைய போட்டிகளை சென்று சந்தேகம் இருந்தால் பாருங்கள் என்று கடுப்பாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் விமர்சங்களை பர்சனலாக எடுத்துக் கொண்ட ரஹானே தற்போது இங்கிலாந்துக்கு எதிராக அரைசதம் அடித்துள்ளார். விமர்சனங்கள் காரணமாக மனமுடைந்து போன ரஹானே இப்போது அதிரடி காட்டி உள்ளார். பிட்ச் மோசமாக ஸ்விங் ஆனது.

பிட்ச் ஸ்விங் ஆன போதும் கூட ரஹானே நிதானமாக அரைசதம் அடித்துள்ளார். இதற்காக ரஹானே பெவிலியனில் அவ்வப்போதும் ஓரமாக உட்கார்ந்து தியானம் செய்தார். பேட்டிங் இறங்கும் போதும், டி பிரேக்கின் போதும், ரன்னர் ஓவருக்கு இடையிலும் ரஹானே தியானம் செய்தார்.

இவர் ஓரமாக உட்கார்ந்து தியானம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. ரஹானே இன்று களத்தில் ஒவ்வொரு பந்துகளையும் எதிர்கொண்ட விதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. 

இந்த சிறப்பான ஆட்டம் மூலம் ரஹானே தனக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்துக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0