சதத்தை நெருங்கிய டெல்லி கேப்டன்.. செஞ்சுரி அடிக்க விடாமல் தடுத்த வீரர்..

அதில் ஒரு சிக்ஸ் மட்டுமே கிடைத்தது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார். தானும் ரன் எடுக்காமல், ஸ்ரேயாஸ் ஐயரின் சதம் அடிக்கும் வாய்ப்பையும் வீணடித்தார் அவர். 

சதத்தை நெருங்கிய டெல்லி கேப்டன்.. செஞ்சுரி அடிக்க விடாமல் தடுத்த வீரர்..

2020 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை விளாசித் தள்ளி 88 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் அவர் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தது. 

ஆனால், சொந்த அணி வீரர் ஒருவரே அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் சதம் அடிக்கும் வாய்ப்பை வீணடித்தார். மேலும், அவரும் அந்த கடைசி ஓவரில் பெரிதாக ரன் குவிக்கவில்லை. இதனால், ரசிகர்கள் இடையே விவாதம் எழுந்தது. 

டெல்லி - கொல்கத்தா போட்டி 2௦20 ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 

போட்டி நடந்த ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால் டெல்லி அணி 200 ரன்களை தாண்டி ரன் குவிக்க முடிவு செய்தது. தவறான முடிவு கொல்கத்தா எடுத்த டாஸ் முடிவு தவறு என துவக்கத்திலேயே நிரூபித்தது டெல்லி கேபிடல்ஸ். 

அந்த அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடினர். தவான் 26, ப்ரித்வி ஷா 66 ரன்கள் குவித்தனர். பண்ட் அதிரடியாக ஆடி 38 ரன்கள் சேர்த்தார். ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிலைத்து நின்று ஆடியதுடன் அதிரடியாக ரன் குவித்தார். 

7 ஃபோர், 6 சிக்ஸ் அடித்து கொல்கத்தா பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் 18 ஓவர்களின் முடிவில் 69 ரன்களில் இருந்தார். 19வது ஓவரில் அவர் மட்டுமே 19 ரன்கள் சேர்த்தார். 

19 ஓவர்கள் முடிவில் ஸ்ரேயாஸ் ஐயர் 88 ரன்களில் இருந்தார். கடைசி ஓவரில் அவர் 12 ரன்கள் எடுத்தால் சதம் அடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 20 வது ஓவரின் முதல் பந்தில் மார்கஸ் ஸ்டோனிஸ் ஸ்ட்ரைக்கில் இருந்தார். 

ஸ்டோனிஸ் முதல் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் ரன் ஓடி ஸ்ட்ரைக்கை பெறவில்லை. அடுத்து வந்த ஹெட்மயர் ஒரு ரன் ஓடி ஸ்ரேயாஸ் ஐயருக்குஸ்ட்ரைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், அவர் சிங்கிள் ரன் ஓடவில்லை. ஹெட்மயர் அடுத்த ஐந்து பந்துகளிலும் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தார். அதில் ஒரு சிக்ஸ் மட்டுமே கிடைத்தது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார். தானும் ரன் எடுக்காமல், ஸ்ரேயாஸ் ஐயரின் சதம் அடிக்கும் வாய்ப்பையும் வீணடித்தார் அவர். 

20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் இன்னும் ரன் எடுத்து இருந்தால் பெரும் இலக்கை நிர்ணயம் செய்து இருக்கும் டெல்லி. 229 ரன்கள் இலக்கிற்கே கொல்கத்தா அணி தடுமாறி தோல்வி அடைந்தது.