முகமது ஷமி இன்றைய இறுதி போட்டியில் படைக்க போகும் வேற லெவல் சாதனை... என்ன தெரியுமா?

இதில் மூன்று முறை அவர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதனால் முகமது சமி மீது இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

முகமது ஷமி இன்றைய இறுதி போட்டியில் படைக்க போகும் வேற லெவல் சாதனை... என்ன தெரியுமா?

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியில் இன்று மோதுகின்றன. 

இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி பெறாமல் இறுதி போட்டி வரை வந்துள்ளதுடன், யாருமே எதிர்பார்க்காத வகையில் நட்சத்திர வீரர் முகமது சமி ஆறு போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதில் மூன்று முறை அவர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதனால் முகமது சமி மீது இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தற்போது உலகக் கோப்பை வரலாற்றில் முகமது சமி 54 விக்கெட் வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். தற்போது முகமது சமி இன்றைய ஆட்டத்தில் மேலும் ஒரு சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதில் முகமது சமி இன்று ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டை வீழ்த்தினால், உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் வசிம் அக்ரமை முகமது சமி பின்னுக்கு தள்ளலாம். 

வசீம் அக்ரம் தற்போது 55 விக்கெட்டுகளுடன் உள்ள நிலையில் முகமது சமி தற்போது 54 விக்கெட்டுகளுடன் பின்னால் இருக்கிறார். வசீம் அகரமுக்கு முன்பு மலிங்கா 56 விக்கெட்டுகளுடன் இருக்கிறார். 

அதற்கு முன்பு லிஸ்டில் ஸ்டார்க் 58 விக்கெட்களுடனும் முரளிதரன் 68 விக்கெட்களுடனும், இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மெக்ராத் 71 விக்கெட்டுகளுடன் முதலாவது இடத்திலும் உள்ளார். 

இன்று மட்டும் சமி மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினால் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்று அல்லது நான்காவது இடத்தை பிடிக்கலாம்.

மேலும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சிறந்த செயல்பாடாக 1979 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜூல் கார்னர் என்பவர் 38 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட் வீழ்த்தியது சாதனையாக கருதப்படுகிறது. 

இந்த சாதனையை 43 வருடத்திற்கு பிறகு முறியடிக்க முகமது சமி,சிராஜ் பும்ரா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.