தென் ஆபிரிக்கா செல்லும் இலங்கை அணியில் புதுமுக வீரர்கள்

இந்தப் போட்டித் தொடருக்கான 21 பேர் கொண்ட இலங்கை குழாம் விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஸவின் அனுமதியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்கா செல்லும் இலங்கை அணியில் புதுமுக வீரர்கள்

தென் ஆபிரிக்கா செல்லும் இலங்கை கிரிக்கெட் குழாத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்தக் குழாத்தில் வனிந்து ஹசரங்க உள்ளிட்ட புதுமுக வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி செஞ்சூரியனில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கு முன்னதாக இலங்கை அணி மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் தென் ஆபிரிக்க பதினொருவர் அணியுடன் விளையாடவுள்ளது.

இந்தப் போட்டித் தொடருக்கான 21 பேர் கொண்ட இலங்கை குழாம் விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஸவின் அனுமதியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்தக் குழாத்தில் டெஸ்ட் அனுபவமற்ற வனிந்து ஹசரங்க, மினோத் பானுக, லஹிரு குமார, விஸ்வ பெர்னாண்டோ உள்ளிட்ட புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சிரேஷ்ட வீரர்களான குசல் ஜனித் பெரேரா, டில்ருவன் பெரேரா, டினேஷ் சந்திமால், குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, லஹிரு திரிமான்ன, சுரங்க லக்மால், தசுன் ஷானக, உள்ளிட்ட வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

கசுன் ராஜித, லசித் அம்புல்தெனிய, துஷ்மந்த சமீர, சந்துஷ் குணதிலக, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க ஆகியோரும் இலங்கை குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். என்றாலும், எல்.பி.எல் தொடரில் உபாதைக்குள்ளான சிரேஷ்ட வீரரான ஏஞ்சலோ மெத்யூஸ் இந்தக் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் காயத்திலிருந்து பூரண குணமடையவில்லை.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0