இந்தியாவிற்கு எதிராக ஆஸி. அஸ்திரத்தை பயன்படுத்தும் இங்கிலாந்து..

இதற்காக அந்த மேட்சின் வீடியோவை இங்கிலாந்து வீரர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள். இதனால் இந்திய அணி மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்தியாவிற்கு எதிராக ஆஸி. அஸ்திரத்தை பயன்படுத்தும் இங்கிலாந்து..

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட தயாராகிக் கொண்டு இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிங்க் பால் போட்டியாகும்.

இந்த போட்டி அகமதாபாத்தில் நடக்க உள்ளது. இதற்காக வலைப்பயிற்சியில் தற்போது இந்திய அணி ஈடுபட்டு வருகிறது.

இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி மிக முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து இருப்பதாக கூறுகிறார்கள். 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா மோசமாக ஆடியது. அதிலும் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வெறும் 36 ரன்களுக்கு அவுட் ஆனது.

பிங்க் பாலில் ஏற்பட்ட ஸ்விங் மற்றும் பவுன்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி அவுட் ஆனது. பிங்க் பால் போட்டிகளில் ஆடுவது எப்போதும் இந்திய அணிக்கு சிரமமான விஷயமாகவே பார்க்கப்பட்டு இருக்கிறது. 
முக்கியமாக ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் பவுன்சர் பந்துகளை இந்திய அணி எதிர்கொள்ள சிரமப்படும். இந்தியாவை முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வீழ்த்துவதற்கே இதுதான் காரணமாக இருந்தது. 

இதே விஷயத்தை இங்கிலாந்து அணியும் தற்போது இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று ஸ்பீட் பவுலர்களை களமிறக்கும் என்கிறார்கள்.

ஆர்ச்சர், ஆண்டர்சன், லீச் ஆகிய மூன்று ஸ்பீட் பவுலர்கள் ஆடுவார்கள். இவர்கள் மூன்று பேருமே இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவை போல பவுலிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை 36 ரன்களில் எப்படி ஆஸ்திரேலியா கவிழ்த்ததோ அதே போல் பவுலிங் செய்ய உள்ளனர்.

அந்த மேஜிக்கை மீண்டும் நிகழ்த்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த மேட்சின் வீடியோவை இங்கிலாந்து வீரர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள். இதனால் இந்திய அணி மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.