சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவிடம் எழுத்துப்பூர்வ ஆதாரம் கேட்கும் பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை கராச்சி, லாகூரில் நடத்த திட்டமிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவிடம் எழுத்துப்பூர்வ ஆதாரம் கேட்கும் பாகிஸ்தான்

கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கிறது. இதனை பாகிஸ்தான் முதல் முறையாக 2025-ல் நடத்துகிறது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை கராச்சி, லாகூரில் நடத்த திட்டமிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

தொடக்க ஆட்டம், அரை இறுதி உள்பட 3 போட்டிகள் கராச்சியிலும், இறுதிப் போட்டி உள்பட 7ஆட்டங்கள் லாகூரிலும், அரையிறுதி உள்பட 5 போட்டிகள், ராவல்பிண்டியிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. பாதுகாப்பு கருதி மத்திய அரசு அனுமதி மறுப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் விளையாட தயார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வருகிற 19-ந்தேதி ஐ.சி.சி.யின் கூட்டம் கொழும்பில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்படும்.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட இந்திய அரசு அனுமதி மறுப்பதற்கு எழுத்துப்பூர்வ ஆதாரத்தை அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ-இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது.

இந்த கடிதத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்குவது கட்டாயம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2023-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாட மறுத்து இலங்கையில் ஆடியது குறிப்பிடத்தக்கது.