அப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்!

மும்பை அணிக்கு எதிராக சென்னையின் வெற்றிக்கு தோனியின் முக்கியமான முடிவு ஒன்று காரணமாக அமைந்தது. 

அப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்!

மும்பை அணிக்கு எதிராக சென்னையின் வெற்றிக்கு தோனியின் முக்கியமான முடிவு ஒன்று காரணமாக அமைந்தது. 

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே அபுதாபியில் முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. முதல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதியது. 

தொடக்கத்தில் இருந்தே இந்த போட்டி விறுவிறுப்பாக சென்றது. முதலில் இருந்தே சென்னை இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. 

மும்பை அணியில் தொடக்கத்தில் இருந்த வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித், டி காக், சூரியகுமார் யாதவ் என்று வரிசையாக முக்கிய வீரர்களை விக்கெட்டுகளை இழந்தனர். 

ஆனாலும் 20 ஓவரில் மும்பை 162 ரன்கள் எடுத்தது. சென்னை எப்படி அதன்பின் களமிறங்கிய சென்னை அணி வரிசையாக தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தது. 

வாட்சன், முரளி விஜய் அடுத்தடுத்து அவுட்டானார்கள். ஆனாலும் அதன்பின் அம்பதி ராயுடு, டு பிளசிஸ் இருவரும் அதிரடியாக ஆடினார்கள். அம்பதி ராயுடு 71 ரன்களும், டு பிளசிஸ் 58 ரன்களும் எடுத்தனர். 

மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றி பெற்றது. 19.2 ஓவரில் சிஎஸ்கே 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை 162 ரன்கள் எடுத்த நிலையில் சிஎஸ்கே 166 ரன்கள் எடுத்து வென்றது. 

இந்த போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் ஆர்டர் சரியாக இல்லை என்றுதான் கூற வேண்டும். சென்னை அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் வலது கை ஆட்டகாரர்கள். 

அதேபோல் அதன்பின் ராயுடு, டுபிளசிஸ் இருவரும் கூட வலதுகை வீரர்கள். இந்த நிலையில்தான் தோனி எடுத்த முடிவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 

கடைசி நேரம் கடைசி நேரத்தில் ராயுடு விக்கெட் விழுந்த பின் வரிசையாக இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்களை தோனி களமிறங்கினார். 

வரிசையாக ஜடேஜா மற்றும் சாம கரன் ஆகியோரை களமிறககினார். இதனால் தொடர்ந்து வலது கை வீரர்களுக்கு பவுலிங் போட்ட மும்பை பவுலர்ஸ் குழம்பி போனார்கள். 

இதன் காரணமாக சென்னை அணி கடைசி நேரத்தில், டெத் ஓவர்களில் வேகமாக ரன் குவித்தது. ஜடேஜா 5 பாலில் 10 ரன்களும், கரன் வெறும் 6 பந்தில் 18 ரன்கள் எடுத்தார். இவர் அடித்த 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி மொத்தமாக போட்டியை மாற்றியது. 

இதனால் டார்கெட் குறைந்து, சிஎஸ்கே எளிதாக வென்றது. தோனி கடைசியில் இறங்கியதும், ஆர்டர் மாற்றப்பட்டதும் சென்னையின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது. 

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0