அவர்கிட்டயே சிக்குறீங்களே.. ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!

அவரது விக்கெட்டை நாதன் லியோன் வீழ்த்தினார். அதன் மூலம், தொடர்ந்து ஆறாவது முறையாக ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார் அவர்.

அவர்கிட்டயே சிக்குறீங்களே.. ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!

ரோஹித் சர்மா தொடர்ந்து ஒரே ஆஸ்திரேலிய வீரரிடம் அதிக முறை ஆட்டமிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மோசமான ஷாட அடித்து ஆட்டமிழந்தார்.

அவரது விக்கெட்டை நாதன் லியோன் வீழ்த்தினார். அதன் மூலம், தொடர்ந்து ஆறாவது முறையாக ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார் அவர்.

ரோஹித் சர்மா 34 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார். கடந்த ஆண்டுகளில் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு முதல் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்த குறுகிய கால டெஸ்ட் அனுபவத்தில் அவர் ஆறு முறை நாதன் லியோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து இருக்கிறார். இதன் மூலம் ஒரே பந்துவீச்சாளரிடம் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார் ரோஹித் சர்மா.

முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியின் காகிசோ ரபாடா பந்துவீச்சில் ஐந்து முறை ஆட்டமிழந்து இருந்தார் ரோஹித் சர்மா. தற்போது நாதன் லியோன் முதல் இடத்தை பிடித்துள்ளார். 

இதுவரை லியோன் பந்துவீச்சில் ரோஹித் 258 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரோஹித் சர்மாவின் விக்கெட் நாதன் லியோனுக்கு 397வது விக்கெட் ஆகும். அவர் இதே டெஸ்ட் போட்டியில் இன்னும் மூன்று விக்கெட்கள் வீழ்த்தி 400 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.