விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய வீரரால் காத்திருக்கும் கண்டம்.. 5 முறை அவுட்.... என்ன நடக்குமோ?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற கடைசி 6 போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் பந்துவீச்சில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி,  5 முறை ஆட்டமிழந்துள்ள தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய வீரரால் காத்திருக்கும் கண்டம்.. 5 முறை அவுட்.... என்ன நடக்குமோ?

20 வருடங்களுக்கு பின்னர் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியில் இன்று  அகமதாபாத் ஆடுகளத்தில் மோதுகின்றன. 

இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற கடைசி 6 போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் பந்துவீச்சில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி,  5 முறை ஆட்டமிழந்துள்ள தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் முறியடிக்க வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட அதிக ஒருநாள் சதங்கள் மற்றும் அதிக உலகக்கோப்பை ரன்காள் ஆகிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்றால் கேப்டன் ரோகித் என்ன முடிவு செய்யனும்?

இதுவரை 50 ஒருநாள் கிரிக்கெட் சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 711 ரன்களை விளாசியுள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரே தொடரில் 700 ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 

இதனால் விராட் கோலி மிரட்டலான ஆட்டம் இறுதிப்போட்டியிலும் தொடரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளில் விராட் கோலி தவித்து வருவது தெரிய வந்துள்ளது. 

ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா 8 முறை விராட் கோலியை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஹேசல்வுட் கடந்த 6 போட்டிகளில் 5 முறை விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

முகமது ஷமி இன்றைய இறுதி போட்டியில் படைக்க போகும் வேற லெவல் சாதனை... என்ன தெரியுமா?

குறிப்பாக ஹேசல்வுட் வீசும் ஷார்ட் பால்களில் விராட் கோலி விக்கெட்டை பறி கொடுத்துள்ளார். ஹேசல்வுட் நல்ல உயரம் என்பதால் அவர் வீசும் பந்துகள் கூடுதல் பவுன்ஸ் ஆகும் தன்மை கொண்டது. அதற்கேற்ப அகமதாபாத் மைதானத்தின் பிட்சும் பவுன்ஸ் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. 

இதனால் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலிக்கு ஹேசல்வுட் சவாலாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. 

நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஹேசல்வுட் 10 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்மை குறிப்பிடத்தக்கது.