செய்யக் கூடாத தப்பு.. கையை தூக்கிய கோலி.. பதறிய அம்பயர்.. 

மறந்து போய்.. பந்தை எடுத்து அதில் எச்சில் தடவ வந்தார். கிட்டத்தட்ட எச்சில் பந்தில் படும் முன் தான் தன் செயலை உணர்ந்தார்.

செய்யக் கூடாத தப்பு.. கையை தூக்கிய கோலி.. பதறிய அம்பயர்.. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தடை செய்யப்பட்ட செயலை செய்து அதிர வைத்தார். டெல்லி அணிக்கு எதிராக பீல்டிங் செய்த போது திடீரென பந்தை எடுத்து எச்சில் தடவச் சென்றார். அவரது செயலைக் கண்டு அம்பயர் பதறினார். எனினும், நாசூக்காக அசடு வழிய சிரித்து நிலைமையை சமாளித்தார் கோலி. அ

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி அதிரடியாக ரன் குவித்தது. 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்து பெங்களூர் அணிக்கு சவால் விட்டது. பெங்களூர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

டெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா இந்தப் போட்டியில் அதிரடியாக ரன் குவித்தார். அவர் 23 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இருந்தார். 5 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து இருந்தார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் பெங்களூர் அணி திணறியது. 

மூன்றாவது ஓவரில் ப்ரித்வி ஷா அசத்தல் டிரைவ் ஒன்றை அடித்தார். பவுண்டரி செல்ல வேண்டிய அந்த ஷாட்டை தடுத்து நிறுத்தினார் விராட் கோலி. சிறப்பாக பீல்டிங் செய்ததால் உற்சாகம் அடைந்தார் கோலி. அப்போது தான் அந்த தவறை செய்யப் பார்த்தார். 

மறந்து போய்.. பந்தை எடுத்து அதில் எச்சில் தடவ வந்தார். கிட்டத்தட்ட எச்சில் பந்தில் படும் முன் தான் தன் செயலை உணர்ந்தார். உடனே அம்பயரை பார்த்தார். அவர் இந்த செயலைக் கண்டு பதறிய நிலையில், கோலி அதை சிரித்து சமாளித்தார். தான் எச்சில் தடவவில்லை என கையை தூக்கிக் காட்டினார். 

ஐசிசி விதிப்படி கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கிரிக்கெட் போட்டிகளில் பந்தின் மீது எச்சில் பயன்படுத்தக் கூடாது. மூன்று முறை ஒரு அணி அதே தவறை செய்தால் 5 ரன் பெனால்ட்டி வழங்கப்படும். நல்ல வேளையாக கோலி அந்த செயலை செய்யும் முன்பே நிறுத்தி விட்டார். எனினும், போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

சச்சின் டெண்டுல்கர் இது பற்றி ட்வீட் போட்டதும் குறிப்பிடத்தக்கது. ப்ரித்வி ஷா அடித்த அற்புதமான ஷாட்டை பாராட்டிய அவர், அதை பீல்டிங் செய்த கோலியையும் பாராட்டினார். அப்படியே மறந்து போய் கோலி எச்சில் தடவ முயன்றதும், அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் பற்றியும் ட்வீட் போட்டிருந்தார் சச்சின். 

இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ராபின் உத்தப்பா இதே தவறை செய்தார். அவர் எச்சில் தடவியதால் எச்சரிக்கப்பட்டார். அது தான் இந்த ஐபிஎல் தொடரில் பந்தில் எச்சில் தடவுவது தொடர்பான நடந்த முதல் விதிமீறல்.

like
1
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0