ஐபிஎல் அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் சென்னை – மும்பை மோதல்

இந்தப் போட்டி அபுதாபியில் செப்டம்பர் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30க்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. 

ஐபிஎல் அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் சென்னை – மும்பை மோதல்

ஐபிஎல் தொடரின் போட்டிகள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி அபுதாபியில் செப்டம்பர் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30க்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. 

இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளும், 3வது போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளும் மோதுகின்றன.

4வது போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. மேற்கண்ட போட்டிகள் அனைத்தும் இரவு 7.30 மணிக்கே தொடங்குகின்றன. 

மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. நவம்பர் 3ஆம் திகதியன்று ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே கடைசி லீக் போட்டி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும்.