ரெஸ்ட் எல்லாம் வேணாம்” ஆர்சிபியில் மீண்டும் டிவில்லியர்ஸ்?.. முன்னாள் வீரர் சுவாரஸ்ய தகவல்!
கடந்த 2011ம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக அறிமுகமான டிவில்லியர்ஸ், கடந்த சீசனுடன் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
இந்திய ரசிகர்களால் செல்லமாக மிஸ்டர் 360 டிகிரி என்றழைக்கப்படுபவர் தென்னாப்பிரிக்க வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ். ஐபிஎல் தொடரில் இவரின் அதிரடிக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக அறிமுகமான டிவில்லியர்ஸ், கடந்த சீசனுடன் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு டிவில்லியர்ஸ் ஒரு தூண் என்றே கூறலாம். ஐபிஎல் வரலாற்றில் தனி நபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்தவர்கள் பட்டியலில் 2வது மற்றும் 3வது இடத்தில் இவரின் பெயர்தான் இடம்பெற்றிருக்கும்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும், கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல்-ல் டிவில்லியர்ஸின் ஆட்டத்தை பார்த்து, மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு திரும்புங்கள் என அழைப்பு வந்தது.
இப்படி புகழ்பெற்ற டிவில்லியர்ஸ், கடந்த ஐபிஎல் சீசனுடன் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கடந்த சீசனில் டிவில்லியர்ஸால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. ஃபார்ம் அவுட் என்பதை உணர்ந்த டிவில்லியர்ஸ், மெகா ஏலத்திற்கு முன்பாகவே வெளியேறிவிட்டார்.
இதனையடுத்து ஆர்சிபி அணி மெகா ஏலத்திற்காக விராட் கோலி (15 கோடி), க்ளென் மேக்ஸ்வெல் (ரூ.11 கோடி), முகமது சிராஜ் (ரூ.7 கோடி) ஆகியோரை மட்டுமே தக்கவைத்தது.
இந்நிலையில் டிவில்லியர்ஸுக்கு மீண்டும் ஆர்சிபி அணி நிர்வாகம் அழைப்பு விடுக்கும் இந்திய அணி முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், டிவிலியர்ஸை ஆர்சிபி இழந்துவிடக் கூடாது. அனைத்து அணிகளுக்கும் பேட்டிங் கோச் என்பவர் மிக முக்கியமானவராக இருக்கிறார்.
எனவே ஆர்சிபி அணி டிவிலியர்ஸை பேட்டிங் கோச்சாக நியமிக்க முற்படும் என நினைக்கிறேன். ரன் அடிக்க சிரமப்படும் நேரங்களில் டிவில்லியர்ஸிடம் ஆலோசனை பெறுவேன் எனக் கோலி கூறியிருந்தார்.
எனவே டிவில்லியர்ஸ் பேட்டிங் கோச்சாக செயல்பட்டால் இளம் பேட்ஸ்மேன்கள் அனைவரும் பயன்பெறுவார்கள் என சஞ்சய் பங்கர் தெரிவித்தார்.