கிரிக்கெட் உலகில் அஸ்வின் உருவாக்கிய புதிய "பென்ச் - மார்க்".. அதிர்ந்த சென்னை..!

சர்வதேச அளவில் மொத்தமாக 76 டெஸ்ட் போட்டிகளில்தான் அஸ்வின் ஆடி இருக்கிறார். இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் ஆடி இருந்தாலும் 392 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

கிரிக்கெட் உலகில் அஸ்வின் உருவாக்கிய புதிய "பென்ச் - மார்க்".. அதிர்ந்த சென்னை..!

சென்னை மைதானத்தில் அஸ்வின் இன்று ரோரி பரன்ஸை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வின் தற்போது மிக சிறந்த டெஸ்ட் பவுலராக உருவெடுத்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் அறிமுகம் ஆன பின் அவருக்கு இணையாக பவுலிங் செய்யும் வீரர் யாரும் இல்லை.

ஸ்டார்க், மொயின் அலி போன்ற உலக தரமான பவுலர்கள் இவரின் காலத்தில் ஆடினாலும் கூட அஸ்வின்தான் மற்ற வீரர்களை விட மிகவும் சிறப்பான பவுலராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

அதிலும் சர்வதேச அளவில் அஸ்வின் பொதுவாக இடதுகை பேட்ஸ்மேன்களை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறார். இடதுகை பேட்ஸ்மேன்களை பார்த்தாலே அடிப்பேன் என்பது போல அஸ்வின் பவுலிங் செய்து வருகிறார். 

சர்வதேச அளவில் மொத்தமாக 76 டெஸ்ட் போட்டிகளில்தான் அஸ்வின் ஆடி இருக்கிறார். இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் ஆடி இருந்தாலும் 392 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

இந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் 400 விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்புள்ளது. இவரை விட அதிகம் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய நாதன் லைன் போன்ற வீரர்கள் கூட இன்னும் 400 விக்கெட்டுகளை எடுக்கவில்லை.

அஸ்வினின் இந்த அசால்ட்டு சாதனைக்கு பின் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. இவர் எடுத்த 392 விக்கெட்டுகளில் 201 விக்கெட் இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட் ஆகும். 

இன்று ரோரி பரன்ஸை அவுட் வைத்ததன் மூலம் அஸ்வின் 201 இடதுகை பேட்ஸ்மேன்களை காலி செய்துள்ளார்.

உலகில் எந்த ஒரு வீரரும் இப்படி ஒரு ஆதிக்கத்தை இடதுகை பேட்ஸ்மேன்கள் மீது செலுத்தியது இல்லை. இடதுகை பேட்ஸ்மேன்கள் வந்தாலே அஸ்வினை அனுப்பும் அளவிற்கு அஸ்வின் ஒரு பென்ச் மார்க்கையே உருவாக்கி இருக்கிறார். 

கண்டிப்பாக இதை முந்த கூடிய ஸ்பின் பவுலர்கள் இப்போது யாரும் இல்லை என்பது குறிப்பிடடதக்கது.