திருப்பி அடிப்போம்.. கெத்து காட்டிய ரவி சாஸ்திரி.. மிரண்டு போன ஆஸி.!
அடுத்ததாக இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முகக் கவசம் அணியாமல் சிட்னி மைதானத்தில் வலம் வந்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியை சிக்கலில் ஆழ்த்த பயோ பபுள் விதிமுறையை பயன்படுத்தி வருவதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முகக் கவசம் அணியாமல் சிட்னி மைதானத்தில் வலம் வந்து சூசகமாக எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும், பிரிஸ்பேன் நகருக்கு செல்ல இந்திய அணி ஒப்புதல் வழங்கவில்லை. அது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது முதல் ஆஸ்திரேலியா, இந்திய வீரர்களுக்கு சிக்கலை உண்டாக்க முயற்சி செய்து வருகிறது.
முதலில் இந்திய வீரர்கள் சிலர் கொரோனா வைரஸ் பாதுகாப்பு வளைய விதிகளை மீறியதாக கூறினார்கள். அடுத்ததாக நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்கள் கடும் குவாரன்டைனில் இருக்க வேண்டும் எனவும் கூறினார்கள்.
ஆனால், இதை இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை என தகவல்கள் வெளியானது. அது உண்மை தான் என்பது போல சிட்னி டெஸ்ட் போட்டி துவங்கிய போது, இந்திய அணி பிரிஸ்பேன் நகருக்கு செல்ல இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என செய்தி வெளியானது.
அடுத்ததாக இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முகக் கவசம் அணியாமல் சிட்னி மைதானத்தில் வலம் வந்தார். அவர் கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவர் என்பதால் அவர் தான் இந்திய அணி சார்பாக இந்த முடிவுகளை எடுக்கிறார் என்ற சந்தேகம் இருந்தது. அது உண்மைதான் எனக் கூறுவது போல அவர் முகக் கவசம் அணியாமல் ஆஸ்திரேலியாவுக்கு தன் எதிர்ப்பை சூசகமாக வெளிப்படுத்தினார்.