வேற வழியே இல்லை.. அவரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.. ஆஸி. வீரர் அதிரடி!

ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு பண்ட்டை அணியில் சேர்க்கலாம். அதன் மூலம், மற்ற ஆல்-ரவுண்டர்களை அணியில் தக்க வைக்கலாம் என்றார்

வேற வழியே இல்லை.. அவரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.. ஆஸி. வீரர் அதிரடி!

இந்திய அணியில் ரிஷப் பண்ட் மீண்டும் தவிர்க்க முடியாத வீரராக மாறி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களில் அதிக ரன் குவித்து டெஸ்ட் அரங்கில் மீண்டும் தன் முத்திரையை பதித்துள்ளார்.

இந்த நிலையில், அவரை மீண்டும் ஒருநாள் அணி மற்றும் டி20 அணிகளில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி.

அவருக்கு எப்படி அணியில் இடம் அளிப்பது என்ற குழப்பம் உள்ளது. ஏற்கனவே, அணியில் இடம் பிடிக்க பல்வேறு வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், ரிஷப் பண்ட் தவிர்க்க முடியாத வீரராக மாறி இருக்கிறார்.

இந்த நிலையில், அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்க ஒரு யோசனையை கூறி இருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக். தற்போது ரிஷப் பண்ட்டுக்கு தன்னம்பிக்கை வந்துள்ளதால் அவரை இந்திய அணியில் ஆட வைக்க வேண்டும் என அவர் கூறினார்.

மேலும், இரண்டு சிறப்பான இன்னிங்க்ஸ் ஆடி இருக்கிறார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்காக நன்றாக ஆடுவதை விட வேறு சிறந்த விஷயம் இருக்க முடியாது. அவரை ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இந்திய அணியில் ஆட வைக்கலாம் என்றார் ஹாக்.

ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு பண்ட்டை அணியில் சேர்க்கலாம். அதன் மூலம், மற்ற ஆல்-ரவுண்டர்களை அணியில் தக்க வைக்கலாம் என்றார் பிராட் ஹாக். அடுத்து வரும் இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் அணியில் முக்கிய வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

like
0
dislike
1
love
0
funny
0
angry
0
sad
0
wow
0