முதலாவது டெஸ்ட்: நியூசிலாந்து அணி 519 ரன்கள் குவிப்பு

10 மணி 24 நிமிடங்கள் களத்தில் நீடித்த வில்லியம்சன் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் குவித்த அதிகபட்ச ரன் இதுவாகும். ராஸ் டெய்லர் 38 ரன்களும், கைல் ஜாமிசன் 51 ரன்களும் எடுத்தனர்.

முதலாவது டெஸ்ட்:  நியூசிலாந்து அணி 519 ரன்கள் குவிப்பு

நியூசிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணி தொடக்க நாளில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்திருந்தது. 

கேப்டன் கேன் வில்லியம்சன் 97 ரன்களுடனும், ராஸ் டெய்லர் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் பேட்டிங்கில் கோலோச்சிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 519 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

தனது 3-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்த கேப்டன் வில்லியம்சன் 251 ரன்கள் (412 பந்து, 34 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்த நிலையில் அல்ஜாரி ஜோசப்பின் பந்து வீச்சில் ரோஸ்டன் சேஸ்சிடம் கேட்ச் கொடுத்து ‘அவுட்’ ஆனார். 

10 மணி 24 நிமிடங்கள் களத்தில் நீடித்த வில்லியம்சன் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் குவித்த அதிகபட்ச ரன் இதுவாகும். ராஸ் டெய்லர் 38 ரன்களும், கைல் ஜாமிசன் 51 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0