100வது டெஸ்ட் போட்டியில் 100 ரன்கள்... சென்னையில் இங்கிலாந்து கேப்டன் அதிரடி!

கடந்த இலங்கைக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மோதிய நிலையில் முதல் போட்டியில் இரட்டை சதமும் இரண்டாவது போட்டியில் சதமும் அடித்திருந்தார் ஜோ ரூட். 

100வது டெஸ்ட் போட்டியில் 100 ரன்கள்... சென்னையில் இங்கிலாந்து கேப்டன் அதிரடி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. 

இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அதிரடி சதத்தை விளாசியுள்ளார்.  தன்னுடைய 100வது போட்டியான இந்த போட்டியில் தனது அதிரடியை நிரூபித்துள்ளார் ரூட். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியா சிப்லி 83 ரன்களை அடித்துள்ளார்.

கடந்த இலங்கைக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மோதிய நிலையில் முதல் போட்டியில் இரட்டை சதமும் இரண்டாவது போட்டியில் சதமும் அடித்திருந்தார் ஜோ ரூட். 

இந்நிலையில் 98, 99 மற்றும் 100வது என தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை இதன்மூலம் ரூட்டிற்கு கிடைத்துள்ளது.

மேலும் இந்த 2021 ஜோ ரூட்டிற்கு மிகவும் சிறப்பாக துவங்கியுள்ளது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு மாதத்திலேயே 500 ரன்களை அவர் குவித்துள்ளார். 

மேலும் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். இலங்கைக்கு எதிரான அடுத்தடுத்த போட்டிகளில் 228 மற்றும் 186 ரன்களை அவர் அடித்திருந்த நிலையில் தற்போது சதத்தை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0