ஐசிசி கோப்பைகள் அனைத்தையும் இந்திய அணி வெல்லும்: லாரா 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்தும் அனைத்து கோப்பைகளையும் வெல்லும் என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

ஐசிசி கோப்பைகள் அனைத்தையும் இந்திய அணி வெல்லும்: லாரா 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்தும் அனைத்து கோப்பைகளையும் வெல்லும் என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான பிரையன் லாரா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விராட் கோலி தலைமையில் தற்போதுள்ள இந்திய அணி அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வெல்லும் திறன் படைத்தது. 

எந்த போட்டி தொடரிலும் கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டி போன்ற முந்திய ஆட்டங்களில் இந்தியாவை எதிர்த்து விளையாட வேண்டியதிருக்கும் என்று ஒவ்வொரு அணியும் உணர்ந்துள்ளன.

 2013-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. ஆனால் தற்போதைய அணி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

 டெஸ்டில் எனது 400 ரன் சாதனையை முறியத்து டேவிட் வார்னர், ரோகித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு உள்ளது. விராட் கோலி முன்னதாகவே களம் இறங்கினால் 400 ரன் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.

4-வது இடத்தில் களம் இறங்கும் ஸ்டீபன் ஸ்மித் எனது சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். அவர் சிறந்த வீரர் என்றாலும் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரால் ஆதிக்கம் செலுத்தி விளையாட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0