இங்கிலாந்தின் அடுத்தடுத்த விக்கெட்டுகள்... அசத்திய அக்சர் படேல்... 

இந்த போட்டி மூலம் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கி விளையாடி வருகிறார் அக்சர் படேல். 

இங்கிலாந்தின் அடுத்தடுத்த விக்கெட்டுகள்... அசத்திய அக்சர் படேல்... 

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இரண்டு இன்னிங்ஸ்களை இந்தியா ஆடி முடித்துள்ள நிலையில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து விளையாடி வருகிறது.

இங்கிலாந்தின் துவக்க வீரர் டாம் சிப்ளி மற்றும் ஜாக் லீக் ஆகியோரின் விக்கெட்டுகளை முறையே 3 மற்றும் டக் அவுட்டாக்கியுள்ளார் இந்திய பௌலர் அக்சர் படேல்.

இந்த போட்டி மூலம் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கி விளையாடி வருகிறார் அக்சர் படேல். 

முதல் இன்னிங்சில் ஜோ ரூட் மற்றும் மொயீன் அலி என முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்ற அக்சர் படேல் தற்போது இரண்டாவது இன்னிங்சிலும் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்தின் துவக்க வீரர் டாம் சிப்ளி மற்றும் ஜாக் லீச் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் தலா 3 ரன்கள் மற்றும் டக் அவுட்டாக்கியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அறிமுக போட்டியிலேயே இதுவரை அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தனக்கு கிடைத்துள்ள முதல் டெஸ்ட் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.

கடந்த முதல் இன்னிங்சில் கேப்டன் ஜோ ரூட்டை சொற்ப ரன்களில் வெளியேற்றினார் அக்சர். அவரது முந்தைய போட்டிகளை பார்த்து அவரது பேட்டிங் ஸ்டைலை கணக்கிட்டு திட்டமிட்டு அவரை வீழ்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார். 

முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரூட், சிப்ளி உள்ளிட்ட வீரர்ககளை வீழ்த்தியதன் மூலம் அக்சர் கவனம் பெற்றுள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0