சிட்னியில் தீயாய் பரவும் கொரோனா.. தனிமையில் மாட்டிய ரோஹித் சர்மா

தற்போது ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். 14 நாட்கள் அவர்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும்.

சிட்னியில் தீயாய் பரவும் கொரோனா.. தனிமையில் மாட்டிய ரோஹித் சர்மா


ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய வீரர் ரோஹித் சர்மா தனது பிட்னஸை நிரூபித்துவிட்டு தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீதம் இருக்கும் போட்டியில் கலந்து கொள்ள இவர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

தற்போது ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். 14 நாட்கள் அவர்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும்.

தனியார் சொகுசு ஹோட்டலில் இவருக்கு தனி அறை கொடுக்கப்பட்டுள்ளது. இவர் இன்னும் சில நாட்கள் இப்படி தனிமையில் இருக்க வேண்டும். அதன்பின்தான் இவர் இந்திய அணியுடன் இணைந்து வலைப்பயிற்சியில் ஈடுபட முடியும்.

ரோஹித் சர்மா தற்போது சிட்னியில் இருக்கிறார். இதே சிட்னியில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. சிட்னியில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் சிட்னியில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்த வார்னர் தற்போது வேறு நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ரோஹித் சர்மா எப்படி இருக்கிறார் என்பது குறித்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில், ரோஹித் சர்மா தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு உதவியாக பிசிசிஐ நிர்வாகிகள் உடன் இருக்கிறார்கள். ரோஹித் சர்மா சிட்னியில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. அவர் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார். ஏதாவது அவசரம் என்றால் அவருக்கும் உதவ ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.

ரோஹித் சர்மாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிட்னியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்போது முடிவு எடுப்போம். இப்போது ஆபத்து எதுவும் இல்லை.

இந்திய அணியில் ரோஹித் சர்மா விரைவில் இணைவார். உடல் வேகத்தை அவர் அதிகரிக்க வேண்டும் என்று பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா அணியில் அவர் இணைந்து அதிரடி காட்ட வேண்டும் என்பதற்கான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது, என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0