ஏன் அணியில் எடுத்தீர்கள்.. முக்கிய வீரரால் சர்ச்சை.. என்ன நடந்தது?

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.

ஏன் அணியில் எடுத்தீர்கள்.. முக்கிய வீரரால் சர்ச்சை.. என்ன நடந்தது?

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதாவிற்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.

3 விக்கெட்டை இழந்தாலும் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் மிகவும் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இதனால் இந்திய பவுலர்கள் கொஞ்சம் பதற்றம் அடைய தொடங்கி உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் இந்திய அணி தேர்வு விமர்சனத்தை சந்தித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் அறிவிக்கப்பட்ட போதே டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற்று இருந்தார். 15 பேர் கொண்ட அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற்றார். இந்த நிலையில் இன்று அஸ்வின், ஜடேஜா ஆகியோர் காயம் அடைந்த நிலையில் குல்தீப் யாதவ் வாய்ப்பு பெற்று இருக்க வேண்டும்.

குல்தீப் யாதவ்தான் முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு பெற்று இருக்க வேண்டும். முக்கியமாக குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர். அஸ்வின் போன்ற அனுபவ வீரர் இல்லாத நிலையில் சுமாரான அனுபவம் கொண்ட குல்தீப் யாதவ்தான் களமிறக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் 15 பேர் கொண்ட அணியில் முதலில் தேர்வு செய்யப்படாத வாஷிங்க்டன் சுந்தருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு சிராஜ், சைனி, ஷரத்துல் என்ற மூன்று ஸ்பீட் பவுலர்கள் உள்ள நிலையில் கூடுதலாக நான்காவதாக ஒரு ஸ்பீட் பவுலராக நடராஜன் களமிறக்கப்பட்டுள்ளார்.

நான்கு ஸ்பீட் பவுலர்களுக்கு பதிலாக இன்று இந்திய அணி சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் என்று இரண்டு ஸ்பின் பவுலர்களுடன் களமிறங்கி இருக்கலாம். இன்று குல்தீப் யாதவ் ஏன் களமிறக்கப்படவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. அவர் மீது நம்பிக்கை இல்லையென்றால் 15 பேர் கொண்ட அணியில் அவரை ஏன் எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது.