கேப்டன் பதவியில் விருப்பம் இல்லை.. ரஹானே பெருந்தன்மை.. அணித்தேர்வில் நடந்த திருப்பம்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்திய அணியில் ரஹானேவின் மதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. 

கேப்டன் பதவியில் விருப்பம் இல்லை.. ரஹானே பெருந்தன்மை.. அணித்தேர்வில் நடந்த திருப்பம்!

இந்திய டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவிக்கு போட்டியிட விருப்பம் இல்லை என்று ரஹானே பிசிசிஐ நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக தகவல்கள் வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்திய அணியில் ரஹானேவின் மதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. 

ஒரு கேப்டனாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரஹானே மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அதிலும் இந்திய அணியில் கோலி தொடங்கி பும்ரா வரை பெரிய வீரர்கள் இல்லாத நிலையிலும் ரஹானே இந்திய அணியை வெற்றியை நோக்கி வழி நடத்தி சென்றார் .

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு ரஹானே நிரந்தரமான கேப்டனாக வர வாய்ப்பு உள்ளதா என்று கேள்விகள் எழுந்தது. 

இதற்கு முன்பும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ரஹானே சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார். ஒரு போட்டியில் கூட தோல்வியே அடையாத டெஸ்ட் கேப்டன் என்ற சாதனையை ரஹானே வைத்து இருக்கிறார்.

இதனால் ரஹானேவை இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக கொண்டு வர பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஒருநாள் அணிக்கு கோலியும், டி 20 அணிக்கு ரோஹித்தும் , டெஸ்ட் அணிக்கு ரஹானேவும் கேப்டனாக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ அமைப்பில் சிலர் கூறியுள்ளனர். கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் இதே கருத்தை கூறியுள்ளனர்.

ஆனால் ரஹானேவிற்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆவதில் பெரிய விருப்பம் இல்லை என்கிறார்கள். 

கேப்டனாக நீடிப்பதில் விருப்பம் இல்லை. இது கோலி உருவாக்கிய அணி. அவருக்கு கீழ் விளையாடுவதை விரும்புகிறேன். தனிப்பட்ட பேட்டிங் மீது கவனம் செலுத்தவும் விரும்புகிறேன்.

தனிப்பட்ட பேட்டிங்கை இன்னும் மெருகேற்ற விரும்புகிறேன் என்று ரஹானே பிசிசிஐ நிர்வாகிகளிடம் கூறியதாக தகவல்கள் வருகிறது. 

ரஹானே மிகவும் எளிமையான வீரர், பெரிய அளவில் பதவிகளை விரும்பாமல் அணிக்காக ஆடுவதில் மட்டுமே இவர் ஆர்வம் காட்டுவதாக பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0