இங்கிலாந்து வீரரிடம் வலிமை அப்டேட்..... சேப்பாக்கத்தில் கேட்ட அஜித் பேன்ஸ்..
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் படம் வலிமை. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது.

இங்கிலாந்து இந்தியா இடையில் சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
இந்த போட்டியில் மொயின் அலி பீல்டிங் நிற்கும் போது அவரிடம் தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசினார்கள். அலி பாய், அலி பாய் என்று செல்லமாக பேசினார்கள்.
இதில் திடீரென அங்கு இருந்த அஜித் ரசிகர் ஒருவர் அலி பாய்.. அலி பாய்.. வலிமை அப்டேட் பிளீஸ் என்று அஜித் ரசிகர்கள் கேட்டனர் . அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என்று இவர்கள் கேட்டனர். இது பெரிய வைரலானது.
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் படம் வலிமை. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது.
இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






