வலுத்து வந்த பிட்ச் சர்ச்சை...முடிவு கட்டிய ஐசிசி... வாயடைத்து போன இங்கிலாந்து முன்னாள் வீரர்கள்..

இங்கிலாந்து அணியின் தோல்விக்கு இந்திய அணிக்கு சாதகமாக பிட்ச் தயார் செய்யப்பட்டதே காரணம் என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

வலுத்து வந்த பிட்ச் சர்ச்சை...முடிவு கட்டிய ஐசிசி... வாயடைத்து போன இங்கிலாந்து முன்னாள் வீரர்கள்..

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்டில் பிட்ச் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஐசிசி அதற்கு முடிவுகட்டியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் இந்தியாவுக்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அந்த பிட்ச் மோசமானது அல்ல என ஐசிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குற்றம் சாட்டியவர்களின் வாயை அடைத்துள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து அணி 2 இன்னிங்ஸ்களிலும் முறையே 112 & 81 ரன்களே எடுத்திருந்தது. 

பின்னர் ஆடிய இந்திய 145 & 49 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தியிருந்தனர்.

இங்கிலாந்து அணியின் தோல்விக்கு இந்திய அணிக்கு சாதகமாக பிட்ச் தயார் செய்யப்பட்டதே காரணம் என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். 

குறிப்பாக முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், இந்தியா போன்ற பலமான நாடுகளை கேள்வி கேட்க பல் இல்லாத அமைப்பாக ஐசிசி செயல்படுகிறது. இந்தியா அவர்களுக்கு ஏற்றார் போல் எப்படிப்பட்ட பிட்சையும் தயார் செய்கிறது. 

அது டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் கெடுகிறது என தெரிவித்தார். பின்னர் ஐசிசியிடம் பிட்ச் குறித்து முறையிட்டது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பிறகு தற்போது ஐசிசி முடிவு கட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள ஐசிசி, 3வது டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட பிட்ச்சானது மோசமானது ( average)அல்ல என்றும் டெஸ்ட் போட்டிக்கு சுமாரான பிட்ச்தான் என்றும் தெரிவித்துள்ளது. 

அதே போல அதே மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்டது நல்ல பிட்ச் என்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்துடனான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட அகமதாபாத் மைதானத்தில்தான் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியும் நடைபெற்றது. 

டெஸ்ட் தொடரில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாய் பிட்ச் அமைந்த நிலையில் முதல் டி20 போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டிருந்தது. எனவே இந்த பிட்ச்-ம் மிகவும் நல்ல பிட்ச் என ஐசிசி அறிவித்துள்ளது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0