உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான டீம்.... அறிவிச்சுட்டாங்க
அணியின் கேப்டனாக விராட் கோலி மற்றும் துணை கேப்டனாக அஜிங்க்யா ரஹானே அறிவிக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
![உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான டீம்.... அறிவிச்சுட்டாங்க](https://sports.colombotamil.lk/uploads/images/202105/image_750x_6096383c19e94.jpg)
ஐபிஎல் 2021 தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடரின் 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அந்த தொடர் மீண்டும் எங்கே எப்போது நடைபெறும் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் அடுத்ததாக வரும் மாதம் 11ம் தேதி துவங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நடவடிக்கையில் தற்போது பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதற்கான அணி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. தேர்வுக்குழு இன்றைய தினம் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட தொடர் போன்றவற்றை சேர்த்து இந்திய அணி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்வுக்குழு 20 பேர் கொண்ட அணி வீரர்களை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.
அணியின் கேப்டனாக விராட் கோலி மற்றும் துணை கேப்டனாக அஜிங்க்யா ரஹானே அறிவிக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆப்ஷனாக விரித்திமான் சாஹா உள்ளார். மேலும் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.
ஹனுமா விஹாரி, ஆர் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், சுந்தர்,பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், தாக்கூர், யாதவ், கேஎல் ராகுல் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இதில் ராகுல் மற்றும் சாஹா ஆகியோர் தங்களது பிட்னசை நிரூபிப்பதன்மூலம் தங்களது இங்கிலாந்து பயணத்தை மேற்கொள்வார்கள்.
இதேபோல கடந்த தொடரில் இடம்பெற்ற பிரசித் கிருஷ்ணாவுக்கும் இந்த தொடரில் இடம்கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த அணி ஜூன் முதல் வாரத்தில் இங்கிலாந்துக்கு புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!