தமிழக வீரர்களை குறைத்து மதிப்பிட்ட தோனி.. செம பதிலடி!

இவர்களை சிஎஸ்கே அணியில் எடுத்தும் கூட அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தோனி புறக்கணித்தார் . இவர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறி தோனி விமர்சனம் செய்தார். 

தமிழக வீரர்களை குறைத்து மதிப்பிட்ட தோனி.. செம பதிலடி!

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் முழுக்க தமிழக அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். அதிலும் சென்னை அணியில் ஐபிஎல் தொடரில் ஆடும் வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடி கவனம் ஈர்த்துள்ளனர்.

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி சாம்பியன் ஆகியுள்ளது. மிகவும் பரபரப்பாக சென்ற இறுதிப்போட்டில் பரோட்டாவை வீழ்த்தி தமிழக அணி வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவரில் 120 ரன்கள்

இந்த நிலையில் தமிழக அணி 18 ஓவரில் 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 2வது முறையாக தமிழக அணி சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்த தொடரில் தமிழக அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். அதிலும் சிஎஸ்கே அணியில் ஆடி வரும் சாய் கிஷோர், என் ஜெகதீசன் இரண்டு பேருமே மிகவும் சிறப்பாக ஆடினார்கள். சாய் கிஷோர் பவுலிங்கிலும், என் ஜெகதீசன் பேட்டிங்கிலும் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

தொடர் முழுக்கவே சாய் கிஷோர் தனது ஸ்பின் பவுலிங் மூலம் கவனம் ஈர்த்தார். ஒவ்வொரு போட்டியிலும் மிக குறைவான ரன்களை கொடுத்து, குறைந்தது 2 விக்கெட்டாவது எடுத்தார். 

இன்னொரு பக்கம் என் ஜெகதீசன் தொடரின் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக ஆடினார். லீக் ஆட்டங்களில் தமிழக அணி வெற்றிபெற இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

லீக் ஆட்டங்களில் ஆதிக்கம் செலுத்திய ஜெகதீசன் நாக் அவுட் சுற்றுகளில் கொஞ்சம் சொதப்பினார். ஆனாலும் மொத்தமாக தொடரில் இவரின் பங்களிப்பை சிறப்பாக இருந்தது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மற்ற அணிகளில் இருக்கும் வீரர்களை விட இவர்கள் சிறப்பாக ஆடினார்கள் என்பதுதான். மற்ற இளம் வீரர்களை விட இவர்கள் பொறுப்பாக ஆடினார்கள்.

ஆனால் இவர்களை சிஎஸ்கே அணியில் எடுத்தும் கூட அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தோனி புறக்கணித்தார் . இவர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறி தோனி விமர்சனம் செய்தார். 

அதிலும் சென்னை அணியில் சரியான ஸ்பின் பவுலர்கள் இல்லை, ஆனால் அப்போதும் கூட சாய் கிஷோருக்கு தோனி வாய்ப்பு கொடுக்கவே இல்லை. சையது முஷ்டாக் தொடரின் சிறப்பான ஸ்பின் பவுலர் என்றால் அது சாய் கிஷோர்தான்.

இவர்களின் ஆட்டம் சிஎஸ்கே அணிக்கு பதிலடியாக அமைந்துள்ளது.எங்களுக்காக வாய்ப்பு கொடுக்கவில்லை என்று சிஎஸ்கே கன்னத்தில் பொளேர் என்று அறைந்தது போல இவர்களின் ஆட்டம் இந்த தொடர் முழுக்க இருந்தது. 

ஜெகதீசன், சாய் கிஷோர் இதனால் கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்கு இந்த முறை ஆட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0