வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.

வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டியை வென்றிருப்பதால், தொடர் 1-1 என சமனில் உள்ளது. 

இந்நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி ஒடிஷாவில் உள்ள கட்டாக்கில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. 

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால், களத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.