திடீர்ன்னு எப்படி மாறினார்? திகைத்து பார்த்த கோலி.. களத்தில் "பகீர்" சம்பவம்!
பெங்களூர் மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியில் தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய மும்பை அணி போக போக பேட்டிங்கில் சொதப்பியது.
மும்பை அணிக்கு எதிராக பெங்களூர் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கொஞ்சம் சொதப்பினாலும், அடுத்தடுத்து பெங்களூர் அணி சுதாரித்து ஆட தொடங்கியது.
பெங்களூர் மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியில் தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய மும்பை அணி போக போக பேட்டிங்கில் சொதப்பியது.
முக்கியமாக டெத் ஓவர்களில் மும்பை அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. 180+ ரன்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணி மோசமாக சொதப்பி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை அணிக்கு எதிராக 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று பெங்களூர் அணி களமிறங்கியது. படிக்கல் இல்லாத காரணத்தால் பெங்களூர் அணியில் வாஷிங்க்டன் சுந்தர் இறங்கினார். ஆனால் ஓப்பனிங் இறங்கிய சுந்தர் பெரிய அளவில் அடிக்க முடியாமல் திணறினார்.
சுந்தர் 10 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில் அதன்பின் களமிறங்கிய படிடாரும் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
அடுத்தடுத்து இரண்டு டாப் ஆர்டர் வீரர்கள் அவுட் ஆனது பெங்களூர் அணிக்கு அதிர்ச்சி அளித்தது. பெங்களூர் அணி இந்த தொடர் விக்கெட்டுகளை பார்த்து கொஞ்சம் பதற்றத்தில்தான் இருந்தது. முக்கியமாக கேப்டன் கோலி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால் அதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் சிறப்பாக பேட்டிங் செய்தார். பொதுவாக வித்தியாசமான ஷாட் அடித்து மேக்ஸ்வெல் விக்கெட் ஆவார்.
பொறுப்பாக ஆட கூடிய ஆள் கிடையாது. ஆனால் பெங்களூர் அணிக்காக ஆடும் முதல் போட்டியிலேயே மேக்ஸ்வெல் மிகவும் பொறுப்பாக ஆடினார்.
நல்ல ஷாட்களை தேர்வு செய்து, ரிஸ்க் எடுக்காமல், அடிக்க வேண்டிய பந்துகளை மட்டுமே அடித்தார். புல் லென்தில் வரும் பந்துகளை மட்டுமே அடித்தார்.
முன்பெல்லாம் மேக்ஸ்வெல் இப்படி ஆடியது இல்லை. இவரின் பொறுமையான ஆட்டத்தை கோலியே எதிர்பார்க்கவில்லை. ரோஹித்தும் இவரின் புதிய பாணி ஆட்டத்தை பார்த்து கொஞ்சம் ஆடிப்போனார்.
பெங்களூர் அணிக்காக கண்டிப்பாக மேக்ஸ்வெல் தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றி இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். தேவையான பந்துகளில் மட்டும் சிக்ஸ் அடித்து மற்ற பந்துகளில் இவர் நிதானம் காட்டினார்.
போன சீசனில் ஒரு சிக்ஸ் கூட அடிக்காத மேக்ஸ்வெல், இன்று முதல் போட்டியிலேயே சிக்ஸ் அடித்தார். மேக்ஸ்வெல் ஐபிஎல் போட்டிகளில் பல காலத்திற்கு பின் பார்மிற்கு திரும்பி இருப்பது பெங்களூர் அணிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.