இப்போ டி20 தரவரிசையிலயும் 2வது இடம்.. கிரிக்கெட் ஜாம்பவான்!

சர்வதேச அளவில் இந்தியா கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை நிரூபித்து வருகிறது. அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக போட்டிகளை எதிர்கொண்டு வருகிறது.

இப்போ டி20 தரவரிசையிலயும் 2வது இடம்.. கிரிக்கெட் ஜாம்பவான்!

ஐசிசி டி20 தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முதல் இரண்டு இடங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இருந்த நிலையில் இந்தியா 3வது இடத்தில் இருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் முதலிடம், ஒருநாள் போட்டிகளில் 2வது இடம், தற்போது டி20 போட்டிகளில் 2வது இடம் என்று கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை இந்தியா தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

சர்வதேச அளவில் இந்தியா கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை நிரூபித்து வருகிறது. அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக போட்டிகளை எதிர்கொண்டு வருகிறது.

பல்வேறு அணிகளுடன் மோதி வெற்றிகளை இந்தியாவிற்கு பரிசாக அளித்து வருகிறது. ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என்று இந்திய வீரர்கள் சிறப்பான வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

ஐசிசி தரவரிசைப்பட்டியல்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அவை அனைத்திலும் இந்தியாவின் மற்றும் இந்திய வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. இதேபோல ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் தற்போது டி20 தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 3வது இடத்தில் இருந்து இந்தியா தற்போது 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து 3 வடிவங்களிலும் முதல் இடங்களை பெற்று சர்வதேச அளவில் இந்தியா தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

பேட்ஸ்மேன்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த கேஎல் ராகுல் ஒரு இடம் பின்தங்கி 3வது இடத்தில் உள்ளார். கேப்டன் விராட் கோலி தொடர்ந்து தன்னுடைய 6வது இடத்தை தக்க வைத்துள்ளார்.

 இந்த வடிவத்தில் முதல் 10 இடங்களில் எந்த இந்திய பௌலரோ அல்லது ஆல்-ரவுண்டரோ இடம்பெறவில்லை. நாளை மறுதினம் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரையடுத்து இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.