முக்கிய நபருக்கு கொரோனா நெகட்டீவ்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்..

டெல்லியில் இருந்து சென்னைக்கு கிளம்புவதற்கு முன்னதாகவே அவருக்கு கொரோனா நெகடிவ் என வந்துவிட்டது. எனினும் தற்போது அவர் சென்னையில் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனதெரிவித்துள்ளார்.

முக்கிய நபருக்கு கொரோனா நெகட்டீவ்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்..

சிஎஸ்கே அணியில் முதலில் பவுலிங் பயிற்சியாளர் பாலாஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைத்து வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மைக் ஹசி மற்றும் பாலாஜியை சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தது சென்னை அணி நிர்வாகம். சென்னையில் சிறப்பான மருத்துவ சிகிச்சை அவர்களுக்கு கிடைக்கும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மைக் ஹசிக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், மைக் ஹசி குணமடைந்துவிட்டார். 

டெல்லியில் இருந்து சென்னைக்கு கிளம்புவதற்கு முன்னதாகவே அவருக்கு கொரோனா நெகடிவ் என வந்துவிட்டது. எனினும் தற்போது அவர் சென்னையில் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனதெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஹசி, இந்தியாவில் தற்போது இருக்கும் சூழல் மிக மோசமாக உள்ளது. நான் தற்போது குணமடைந்துவிட்டேன். சிறந்த உடல்நலத்துடன் இருப்பதாக உணர்கிறேன். 

சென்னை நிர்வாகம் எனக்கு கொடுத்த கவனிப்பு பாராட்டக்குரியது. எனக்கு இது போன்ற கவனிப்பு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு மே 15 வரை ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் மாலத்தீவு, இலங்கையில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள், தங்கள் தாய் நாடு திரும்ப பிசிசிஐ ஏதாவது ஏற்பாடு செய்யும் என்ற நம்பிக்கையுடன் காத்துள்ளனர். மைக்கேல் ஹசி குவாரண்டைக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கலாம்.