32 ஆண்டுகால ஆஸியின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா... அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்

காபா டெஸ்ட் போட்டி டிராவானால் கூட அது ஆஸ்திரேலியாவின் தோல்வி என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். 

 32 ஆண்டுகால ஆஸியின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா... அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்

"இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ள காபா மைதானம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக் கோட்டையாக இருக்கலாம். 

ஆனால் அங்கும் இந்திய அணியின் வெற்றிக்கொடி பறக்கும். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை" என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், காபா டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

அவர் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என வென்று காட்டியுள்ளது இந்திய அணி. 

மெல்பேர்ன், காபா என இரண்டு மைதானங்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்தி  சென்றது கேப்டன் ரஹானே என்பதும் குறிப்பிடத்தக்கது.

காபா டெஸ்ட் போட்டி டிராவானால் கூட அது ஆஸ்திரேலியாவின் தோல்வி என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். 

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது இந்தியா. கடந்த 1988 முதலே இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. இதுதான் அந்த அணி பெற்ற முதல் தோல்வி. 

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0