ஐபிஎல் துவக்க வாரத்தில் புதிய உச்சம்... அதிக பார்வையாளர்கள்

இந்த தொடரின் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே இடையில் நடைபெற்ற நிலையில் அந்த போட்டியை 52 மில்லியன் ரசிகர்கள் தொலைகாட்சி வாயிலாக கண்டு களித்துள்ளனர். 

ஐபிஎல் துவக்க வாரத்தில் புதிய உச்சம்... அதிக பார்வையாளர்கள்

ஐபிஎல் போட்டிகள் துவங்கி இரண்டாவது வாரத்தில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பரபரப்பான போட்டிகளை ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். 

இந்த தொடரின் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே இடையில் நடைபெற்ற நிலையில் அந்த போட்டியை 52 மில்லியன் ரசிகர்கள் தொலைகாட்சி வாயிலாக கண்டு களித்துள்ளனர். 

இந்நிலையில் போட்டித்தொடரின் துவக்க வாரத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவிகித பார்வையாளர்கள் அதிகமாக போட்டிகளை கண்டு களித்துள்ளதாக அதாவது 269 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை தாண்டி இரண்டாவது வாரமாக ஐபிஎல் ரசிகர்களுக்கு சிறப்பான தருணங்களை தந்துக் கொண்டிருக்கிறது. 

இந்த தொடரின் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே இடையில் நடைபெற்றது. 52 மில்லியன் பார்வையாளர்கள் இந்த முதல் போட்டியை உலக அளவில் இதுவரை எந்த தொடரிலும் இல்லாத வகையில், அதிகமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். 

முதல் போட்டியை 52 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்ததாகவும் முதல் வாரத்தின் போட்டிகளை 34 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்ததாகவும் பார்க் -நீல்சன் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 269 மில்லியன் பார்வையாளர்கள் முதல் வாரத்தில் நடைபெற்ற போட்டிகளை மட்டும் 269 மில்லியன் பார்வையாளர்கள் தொலைகாட்சி மற்றும் மொபைல் உள்ளிட்டவற்றின்மூலம் கண்டு களித்துள்ளனர். 

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் மக்கள் முடங்கியிருந்தாலும் ஐபிஎல் பார்த்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

86 மில்லியன் வீடுகளில் உள்ளவர்கள் இந்த போட்டிகளை முதல் 7 நாட்களில் கண்டுள்ளதாகவும் தொலைக்காட்சியை கண்டு களிப்பவர்களில் 3ல் ஒருவர் ஐபிஎல் போட்டிகளை பார்த்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

விளம்பரங்களின் வரவும் முதல் வாரத்தில் 15 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மற்றும் தசரா பண்டிகைகள் நெருங்கும் வேளையில் இந்த விளம்பரங்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.