2வது டெஸ்ட்-ம் டிரா ஆகுமா... அச்சுறுத்தும் வானிலை.. உச்சகட்ட பரபரப்பில் 4ம் நாள் ஆட்டம்!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

2வது டெஸ்ட்-ம் டிரா ஆகுமா... அச்சுறுத்தும் வானிலை.. உச்சகட்ட பரபரப்பில் 4ம் நாள் ஆட்டம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கத்தில் சிறிது சறுக்கலை சந்தித்தது. தொடக்க வீரர் டாம்னிக் சிப்லே 11 ரன்களுக்கு வெளியேறினார். 

அதன் பிறகு வந்த ஹசீப் ஹமீத்தும் அதே ஓவரில் சிராஜின் வேகத்தில் சிக்கி க்ளீன் போல்ட் ஆனார். இதன் பின்னர் வந்த ஜோ ரூட், பொறுப்பான ஆட்டத்தால் ரன்களை உயர்த்தினார்.

ஓப்பனிங் வீரர் ரோரி பேர்ன்ஸுடன் ஜோடி சேர்ந்து ஆடிய ரூட், 3 விக்கெட்டிற்கு 85 ரன்களை சேர்த்தது. நன்றாக விளையாடிவந்த ரோரி பேர்ன்ஸ் 49 ரன்களுக்கு அவுட்டானார். எனினும் மறுமுணையில் இருந்த ஜோ ரூட், தொடர்ந்து தனது அச்சுறுத்தலை கொடுத்து வந்தார்.

எனினும் மறுமுணையில் இருக்கும் ரூட்டினை, இந்திய பவுலர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவரின் ரன் வேட்டை தொடர்ந்துக்கொண்டே சென்று சதம் அடித்து அசத்தினார். இதனால் இந்திய பவுலர்களின் மீது பிரஷர் அதிகரித்தது.

இதனால் இங்கிலாந்து அணி 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியை விட தற்போது 27 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளோடு இந்திய அணி 4ம் நாளான இன்று தனது 2வது இன்னிங்ஸை தொடங்கவுள்ளது. ஆனால் அதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. 

நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி 5ம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் 2ம் டெஸ்ட் போட்டியில் 4வது நாளிலேயே மழை அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது.

போட்டி நடைபெறும் லண்டன் நகரத்தின் வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி இன்று போட்டியின் தொடக்கத்தில் இருந்தே கடும் மேகமூட்டம் இருக்கும் என்றும், கனமழையினால் இன்றைய ஆட்டம் முழுவதுமே பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கு முன்னர் நடைபெற்ற 3 நாட்களிலும் நல்ல வெயில் அடித்தது. 2ம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் மட்டுமே சற்று மேகமூட்டம் இருந்தது. இதனால் வேகப்பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிற்குமே சிறப்பாக அமைந்து ஆட்டம் சூடு பிடித்துள்ளது.

இந்த சூழலில் இன்றை நாள் முழுவதும் மழை பெய்தால் இந்தியாவால் 2வது இன்னிங்ஸை தொடங்கவே முடியாது. 5ம் நாள் ஆட்டமான நாளை ஒரே நாளில் 2 இன்னிங்ஸையும் விளையாடி முடிக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்பதால், 2வது டெஸ்ட் போட்டியும் சமனில் முடிவடையவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0