150கிமீ வேகத்தில் தாக்கிய பந்து.. கீழே விழுந்து துடித்த வீரர்.. உறைய வைத்த சம்பவம்
முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். முதல் பந்தே 152 கிமீ வேகத்தில் ஆர்ச்சர் வீசினார். இந்த பந்து பாண்டியா தலைக்கு அருகில் சென்றது.
நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து நேரடியாக சூர்யகுமார் யாதவ் தலையில் பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மும்பைக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்த காரணத்தால் நேற்று நடந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் இருந்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 4 விக்கெட் இழந்து 193 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் அணி 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
நேற்று நடந்த போட்டியில், நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ராஜஸ்தான் அணியின் வீரர் ஆர்ச்சர் வீசிய 18வது ஓவரில் இந்த சம்பவம் நடைபெற்றது.
அப்போது முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். முதல் பந்தே 152 கிமீ வேகத்தில் ஆர்ச்சர் வீசினார். இந்த பந்து பாண்டியா தலைக்கு அருகில் சென்றது.
ஆனால் பாண்டியா இந்த பந்து படாமல் தப்பித்தார். அதன்பின் அதே ஓவரில் மூன்றாவது பந்தில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அப்போது 150 கிமீ வேகத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் ஷார்ட் பால் ஒன்று போட்டார்.
இந்த பந்து வேகமாக சென்று சூர்யகுமார் யாதவ் தலையில் அடித்தது. இதனால் அவரின் ஹெல்மெட் லேசாக நெளிந்தது.
இந்த சம்பவம் காரணமாக அப்படியே சூர்யகுமார் யாதவ் கலங்கி போனார். ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் சூர்யகுமார் யாதவ் தலையை பிடித்துக் கொண்டு அப்படியே நின்றுவிட்டார்.
அவருக்கு மொத்தமாக தலை கலங்கிவிட்டது. இதை பார்த்ததும் வேகமாக ஆர்ச்சர் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டார். கை வலுக்கிவிட்டது என்று ஆர்ச்சர் மன்னிப்பு கேட்டார்.
அதன்பின் சில நிமிடம் பிரேக் எடுத்துவிட்டு சூர்யகுமார் யாதவ் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். அடுத்த பந்திலேயே 147 கிமீ வேகத்தில் வந்த பந்தை ஸ்கூப் ஷாட் அடித்தார் சூர்யகுமார் யாதவ்.
ஆம் தலையில் காயம் ஏற்பட்ட அடுத்த பந்திலேயே சூர்யகுமார் யாதவ் ஸ்கூப் ஷாட் அடித்தார். சிக்ஸ் அதுவும் இது சாதராண ஸ்கூப் ஷாட் அல்ல. அப்படியே எதிர்பக்கம் திரும்பி இவர் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் அடித்தார்.
இந்த பந்து தேர்ட் மேன் திசைக்கு சிக்ஸ் சென்றது. தலையில் காயம் ஏற்பட்டதை கூட பொருட்படுத்தாமல் இவர் சிக்ஸ் அடித்தது..பலரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது.