கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர், உபதலைவர் அறிவிப்பு
கோல் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் உப தலைவர் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

Sri Lanka's No.1 Sports HUBலங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை நட்சத்திரம் சஹிட் அப்ரிடி செயற்பாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
லங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஆரம்பமாக இன்னும் 5 நாட்கள் மாத்திரம் எஞ்சியிருக்கும் நிலையில், கோல் க்ளேடியட்டர்ஸின் உத்தியோகபூர்வ ட்விட்டர் (Twitter) கணக்கு மூலம் அதன் தலைவர், உபதலைவர் தொடர்பிலான விடயங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
LPL தொடரில் மாலிங்க இல்லை என்பது உறுதி
லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கோல் க்ளேடியேட்டர்ஸ் தரப்பின் தலைவராக செயற்பட எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்தவீச்சாளர் லசித் மாலிங்க போதிய பயிற்சிகள் தனக்கு இல்லை எனக் கூறி இந்த தொடரிலிருந்து விலகியிருந்தார். இவ்வாறு மாலிங்க இல்லாத சந்தர்ப்பம் ஒன்றிலேயே கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவராக சஹீட் அப்ரிடி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
அதேநேரம், கோல் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் உப தலைவர் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
மறுமுனையில் சஹீட் அப்ரிடி எதிர்வரும் திங்கட்கிழமையே (23) இலங்கை வர எதிர்பார்க்கப்படுவதனால் அவர் இங்கே வந்து கொவிட்-19 வைரஸ் முன்னெச்சரிக்கைக்கான கட்டாய சுயதனிமைப்படுத்தலிலும் ஈடுபட நேரிடும். எனவே, அவருக்கு கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் ஆரம்ப போட்டிகள் சிலவற்றில் விளையாட முடியாமல் போகும். இந்த சந்தர்ப்பத்தில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவராக செயற்படும் வாய்ப்பு பானுக்க ராஜபக்ஷவிற்கு கிடைத்திருக்கின்றது.
கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியினர் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் தங்களது முதல் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியுடன் எதிர்வரும் 27ஆம் திகதி விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
???????? #GalleGladiators name superstar ????@SAfridiOfficial as captain, #BhanukaRajapaksa as vice-captain
— GalleGladiators (@GalleGladiators) November 21, 2020
We’re ready for #HoldingTheFort????
#LPL2020 pic.twitter.com/rtZrw64Cf0






