சூப்பரான விஷயத்தை செஞ்சிருக்காரு தோனி... பாராட்டியிருக்காரு ரெய்னா

ஐபிஎல்லின் கடந்த சீசனில் விளையாடுவதற்காக சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னா யூஏஇ சென்ற நிலையில், சொந்த காரணங்களால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் நாடு திரும்பினார்.

சூப்பரான விஷயத்தை செஞ்சிருக்காரு தோனி... பாராட்டியிருக்காரு ரெய்னா

ஐபிஎல் 2021 சீசனில் சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாடவுள்ளார் அந்த அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா. இதையொட்டி மும்பைக்கு சென்றுள்ள அவர் நாளை முதல் துவங்கவுள்ள அணியின் பயிற்சி முகாம்களில் பங்கேற்கவுள்ளார்.

நேற்றைய தினம் சிஎஸ்கேவின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லின் கடந்த சீசனில் விளையாடுவதற்காக சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னா யூஏஇ சென்ற நிலையில், சொந்த காரணங்களால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் நாடு திரும்பினார். 

இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவர் தொடர்ந்து சிஎஸ்கேவிற்காக விளையாடுவாரா என்ற கேள்விகளையும் எழுப்பியது.

இந்நிலையில் ஐபிஎல் 2021 சீசனில் சிஎஸ்கேவிற்காக விளையாடவுள்ளார் சுரேஷ் ரெய்னா. கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும், தற்போது மும்பையில் நாளை முதல் துவங்கவுள்ள பயிற்சிகளில் அவர் பங்கேற்கவுள்ளார். இதையொட்டி மும்பை சென்றுள்ளார்.

நேற்றைய தினம் சிஎஸ்கேவின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய ராணுவத்தினரை பெருமைப்படுத்தும் வகையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது. 
இந்த ஜெர்சியை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ராணுவத்தினரின் மகத்தான பணியை போற்றும்வகையில் இந்த இணைப்பு செய்யப்பட்டதற்கு ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.