எங்கே போனார்கள்? ஜடேஜா, பண்ட் இல்லாமல்.. என்ன நடந்தது?

முதல் இன்னிங்க்ஸில் அணிக்கு பெரிய திருப்பம் ஏற்படுத்திக் கொடுத்த அவர் களத்திலேயே இல்லை என்பதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு எழுந்தது.

எங்கே போனார்கள்? ஜடேஜா, பண்ட் இல்லாமல்.. என்ன நடந்தது?

சிட்னி டெஸ்ட் போட்டியில் ஜடேஜா ஆஸ்திரேலிய அணியின் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங்கின் போது பந்து வீச வரவில்லை.

முதல் இன்னிங்க்ஸில் அணிக்கு பெரிய திருப்பம் ஏற்படுத்திக் கொடுத்த அவர் களத்திலேயே இல்லை என்பதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு எழுந்தது.

அப்போது பிசிசிஐ அதற்கான விளக்கம் அளித்தது. ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் அவர் பந்து வீசுவது கடினம் என தெரிய வந்தது. அதே போல பண்ட்டுக்கு பதில் விரிதிமான் சாஹா விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் ரிஷப் பண்ட், ஜடேஜா என இரு வீரர்கள் காயம் அடைந்தனர். இரண்டாம் இன்னிங்க்ஸில் இவர்களால் ஆட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 338 ரன்கள் குவித்தது. இந்திய அணி அடுத்து பேட்டிங் செய்தது. அப்போது ரிஷப் பண்ட்டுக்கு கை முட்டியில் காயம் ஏற்பட்டது. அவர் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அடுத்து ஜடேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 28 ரன்கள் எடுத்தார். அவர் பேட்டிங் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து அவர் இடது கை பெருவிரலில் தாக்கியது.

அப்போதே ஜடேஜா வலியால் துடித்தார். எனினும், அதை சமாளித்து அவர் தொடர்ந்து பேட்டிங் செய்தார். இந்தியா 244 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்க்சை முடித்த உடன் அவர் மருத்துவமனைக்கு விரைந்தார். முதல் இன்னிங்க்ஸில் பந்து வீச்சில் ஜடேஜா 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவர் ஸ்டீவ் ஸ்மித்தை ரன் அவுட் செய்து, 5 விக்கெட்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். அவர் இல்லாமல் இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்தியா பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. அதே போல, ரிஷப் பண்ட்டுக்கு பதில் விரிதிமான் சாஹா விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0