தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்; பிவி சிந்து தோல்வி.. முதல் சுற்றுடன் வெளியேற்றம்!

அடுத்த சில போட்டிகளில் பிவி சிந்து தன் பார்மை பெற்று விடுவார் என விமர்சகர்கள் கூறி உள்ளனர்.

 தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்; பிவி சிந்து தோல்வி.. முதல் சுற்றுடன் வெளியேற்றம்!

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் பிவி சிந்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.

கடந்த ஆண்டு லாக்டவுன் அறிவிக்கப்பட்டது முதல் பிவி சிந்து பாட்மிண்டன் தொடர்களில் பங்கேற்காமல் இருந்தார்.

தற்போது அவர் தாய்லாந்து பாட்மிண்டன் தொடரில் பங்கேற்றார். அந்தப் தொடரில் முதல் சுற்றுடன் அவர் வெளியேறினார்.

முதல் சுற்றுப் போட்டியில் அவர் 21 - 16, 24 - 26, 13 - 21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் ஆடினாலும் அவர் நல்ல நிலையிலேயே ஆடினார். ஆனால், அவரது ஆதிக்கம் செலுத்தும் ஆட்டத்தை காண முடியவில்லை.

அடுத்த சில போட்டிகளில் பிவி சிந்து தன் பார்மை பெற்று விடுவார் என விமர்சகர்கள் கூறி உள்ளனர்.

இந்தியாவின் ஆடவர் இரட்டையர் இணை சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி முதல் சுற்றில் தென்கொரிய இணையான கிம் ஜிங் ஜங் மற்றும் லீ யாங் டேவை 19 - 21, 21 - 16, 21 - 14 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினர். 

இந்தப் போட்டியில் முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரு செட்களை போராடி வென்றது குறிப்பிடத்தக்கது.

கலப்பு இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டி மற்றும் சுமீத் ரெட்டி இணை, 20 - 22, 17 - 21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தனர்.