கங்குலிக்கு 3 இடத்தில் அடைப்பு.. அடுத்த 24 மணி நேரம் இதுதான் நிலைமை!

சவுரவ் கங்குலி நேற்று காலை உடற்பயிற்சி செய்த போது நெஞ்சில் வலி ஏற்பட்டு மருத்துவமனை விரைந்தார். அங்கே அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது இருப்பது கண்டறியப்பட்டது.

கங்குலிக்கு 3 இடத்தில் அடைப்பு.. அடுத்த 24 மணி நேரம் இதுதான் நிலைமை!

சவுரவ் கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு அளித்த சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தனர்.

அப்போது அவருக்கு மூன்று ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்ததாகவும், ஒரு இடத்தில் 90 சதவீதம் அடைப்பு இருந்ததாகவும் கூறினர்.

சவுரவ் கங்குலி நேற்று காலை உடற்பயிற்சி செய்த போது நெஞ்சில் வலி ஏற்பட்டு மருத்துவமனை விரைந்தார். அங்கே அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது இருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

கங்குலி தொடர்ந்து நிலையாகவே இருந்ததாக அவரை மருத்துவமனையில் சந்தித்த அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்கள் கூறினர். மாலை அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. ஒரு ஸ்டன்ட் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

சிகிச்சை முடிவில் மருத்துவமனை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், கங்குலிக்கு மூன்று ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்ததாக கூறப்பட்டு இருந்தது. மேலும், அதில் ஒரு இடத்தில் 90 சதவீதம் அடைப்பு இருந்துள்ளது. அது மோசமான நிலை ஆகும்.

அடுத்த இரு தினங்களில் மருத்துவர்கள் இன்னும் இரண்டு ஸ்டன்ட்களை, மற்ற இரண்டு அடைப்பு உள்ள ரத்தக்குழாய்களில் பொருத்த வாய்ப்பு உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் கூறி உள்ளது. அவருக்கு முதற்கட்ட சிகிச்சை முடிந்த நிலையில் மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி நேரில் சந்திக்க வந்தார்.

முதலில் அவரை நேற்று மாலையே வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என கூறப்பட்ட நிலையில், அடுத்த 48 மணி நேரம் கங்குலி மருத்துவமனையில் தான் இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் அடுத்த 24 மணி நேரம் அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பார்.

மேற்கு வங்காள தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கங்குலியை விசாரிக்க பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அதனால், அங்கே தொடர்ந்து பரபரப்பான சூழல் காணப்பட்டது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0