அரை இறுதியை உறுதி செய்தது தம்புள்ள வைகிங்

தம்புள்ள வைகிங் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்களையே பெற முடிந்தது. அதன்படி தம்புள்ள வைகிங் அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அரை இறுதியை உறுதி செய்தது தம்புள்ள வைகிங்

எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் தம்புள்ள வைகிங் அணி காலி கிலெடியேடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்துகொண்டுள்ளது.

இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள வைகிங் அணி சார்பாக நிரோஸன் திக்வெல்ல மற்றும் உபுல் தரங்க ஜோடி அதிரடி ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது. இவர்கள் 12.4 ஓவர்களில் 110 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

நிரோஸன் திக்வெல்ல 37 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 60 ஓட்டங்களையும், உபுல் தரங்க ஒரு சிக்ஸர், 11 பௌண்டரிகளுடன் 77 ஓட்டங்களையும் பெற்றனர். தசுன் ஷானக 37 ஓட்டங்களைப் பெற்றார்.

தம்புள்ள வைகிங் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களை குவித்தது.

208 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய காலி கிலெடியேடர்ஸ் அணி 47 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. அஸான் அலி, பானுக ராஜபக்ஸ ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

என்றாலும் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரானதனுஸ்க குணதிலக மற்றும் அஸான் கான் ஜோடி 48 பந்துகளில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

தனுஸ்க குணதிலக ஒரு சிக்ஸர், 10 பௌண்டரிகளுடன் 78 ஓட்டங்களையும், அஸான் கான் 24 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 55 ஓட்டங்களையும் பெற்றனர். வோல்டன், மிலிந்த சிறிவர்தன ஆகியோரால் பெரிதாகப் பிரகாசிக்க முடியவில்லை.

தம்புள்ள வைகிங் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்களையே பெற முடிந்தது. அதன்படி தம்புள்ள வைகிங் அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அன்வர் அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தம்புள்ள அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கினார். இது தம்புள்ள அணி பெற்ற நான்காவது வெற்றி என்பதுடன் இதன் மூலம் அரை இறுதியையும் உறுதி செய்துகொண்டது.