இலங்கைக்கு எதிரான தொடரில் ஜொப்ரா ஆச்சர், பென் ஸ்டோக்ஸுக்கு ஓய்வு

இலங்கை விஜயத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும், நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜொப்ரா ஆச்சர் ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான தொடரில் ஜொப்ரா ஆச்சர், பென் ஸ்டோக்ஸுக்கு ஓய்வு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியில் ஜொனி பெயார்ஸ்டோ இணைக்கப்பட்டுள்ளார். எனினும், பென் ஸ்டோக்ஸ், ஜொப்ரா ஆச்சர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து குழாத்தில் ஜொனி பொயார்ஸ்டோ இணைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து இறுதியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே ஜொனி பெயார்ஸ்டோ இடம்பெற்றுள்ளார். அதேபோன்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில் இருந்தும் ஜொனி பெயார்ஸ்டோ நீக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறான நிலையில் இலங்கை விஜயத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும், நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜொப்ரா ஆச்சர் ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு அப்படியே இந்தியாவுக்கு பயணிக்க இங்கிலாந்து அணி தயாராகியுள்ளது. அப்போது ஜொப்ரா ஆச்சருக்கும், பென் ஸ்டோக்ஸிற்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுழற்சி முறையில் அணிக்கு வீரர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு உரிய காலத்தில் ஓய்வளித்து வீரர்களை சிறப்பாக பேணுவதற்கு உத்தேசித்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0