ஐ.பி.எல். தொடரில் களமிறங்கவுள்ள மேலும் இரு அணிகள்

2022 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும்.

ஐ.பி.எல். தொடரில் களமிறங்கவுள்ள மேலும் இரு அணிகள்

இந்தியாவின் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. யின் 89 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் இரண்டு புதிய அணிகள் சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

தற்போது ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 

2022 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும். 2011 ஆம் ஆண்டில் இந்த தொடரில் அதிகபட்சமாக 10 அணிகள் பங்கேற்று இருந்தது. மீண்டும் அந்த நிலைக்கு அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

அத்துடன் பி.சி.சி.ஐ.யின் 89 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் மேலும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.