கிளம்பி போயிட்டா என்ன செய்யுறது? கோபத்தை கொட்டிய தோனி.. கோட்டை எல்லாம் அழிங்க!

2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஏலம் சென்னையில் நடக்கிறது.

கிளம்பி போயிட்டா என்ன செய்யுறது? கோபத்தை கொட்டிய தோனி.. கோட்டை எல்லாம் அழிங்க!

2021 ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணியில் முக்கியமான சில வீரர்கள் ஆட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி நிறைய பேக் அப் வீரர்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஏலம் சென்னையில் நடக்கிறது.

சிறிய அளவில் மினி ஏலமாக இந்த ஏலம் நடக்க உள்ளது. இதற்காக 8 ஐபிஎல் அணி நிர்வாகிகளும் தற்போது சென்னை வந்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணியில் முக்கியமான சில வீரர்கள் ஆட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி நிறைய பேக் அப் வீரர்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரின் போது இரண்டு விதமான கிரிக்கெட் தொடர்கள் நடக்க உள்ளது.

அதன்படி ஏப்ரல் மாதத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இன்னொரு பக்கம் ஜூன் மாதத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தொடர் நடக்க உள்ளது. இதுதான் சிஎஸ்கே அணிக்கு சிக்கலாகி உள்ளது.

அதன்படி ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சிஎஸ்கே அணியில் டு பிளசிஸ், லுங்கி நிகிடி ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற மாட்டார்கள். இவர்கள் தொடக்கத்தில் ஆட மாட்டார்கள். இன்னொரு பக்கம் தொடரின் இறுதியில் சாம் கரன், மிட்சல் சாண்டர் ஆட மாட்டார்கள்.

இதனால் ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் ஓப்பனிங் வீரர்களும், இறுதியில் ஆல் ரவுண்டர்களும் இல்லாமல் சென்னை அணி கஷ்டப்படும். சிஎஸ்கே அணியில் கடந்த வருடம் இதேபோல் ரெய்னா, ஹர்பஜன், பிராவோ போன்ற வீரர்கள் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இப்போதும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

இது தோனியை டென்சனுக்கு உள்ளாக்கி இருக்கிறது என்று கூறுகிறார்கள். முக்கிய வீரர்கள் இப்படி இல்லாத காரணத்தால் சிஎஸ்கே அணி மாற்று வீரர்களை தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் நாளை நடக்கும் ஏலத்தில் சிஎஸ்கே அணி இதற்கு ஏற்றபடி வீரர்களை ஏலம் எடுக்கும் என்கிறார்களா.


கிரிக்கெட்னா உயிரா?.. மைகே

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0