ரிவ்யூ முடிந்த பின்பும் நகராமல் நின்ற இங்கிலாந்து வீரர்கள்.. குழம்பிய நடுவர்.. பகீர் சம்பவம்

இதையடுத்து டிஆர்எஸ்ஸில் விக்கெட் இல்லை என்று கொடுக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து வீரர்கள் நகராமல் அப்படியே நின்றனர். 

ரிவ்யூ முடிந்த பின்பும் நகராமல் நின்ற இங்கிலாந்து வீரர்கள்.. குழம்பிய நடுவர்.. பகீர் சம்பவம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரஹானேவிற்கு விக்கெட் கொடுக்கப்படாதது பெரிய சர்ச்சையாகி உள்ளது. 

இந்த போட்டியில் ஜாக் லீச் போட்ட 75வது ஓவரின் முதல் பந்தில் ரஹானேவின் பேட்டிற்கு அருகில் பந்து சென்று கேட்ச் சென்றது. இந்த பந்தை கீப்பர் பிடித்த காரணத்தால் இங்கிலாந்து வீரர்கள் விக்கெட் கேட்டனர்.

எட்ஜாகி விக்கெட் விழுந்துவிட்டது என்று நினைத்து இங்கிலாந்து வீரர்கள் விக்கெட் கேட்டனர். இதையடுத்து உடனே ரிவ்யூ கேட்கப்பட்டது. ஆனால் இந்த ரிவ்யூவில் பந்து பேட்டுக்கு மிக அருகில் சென்றது. ஆனால் பந்தை உரசவில்லை.

இதையடுத்து டிஆர்எஸ்ஸில் விக்கெட் இல்லை என்று கொடுக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து வீரர்கள் நகராமல் அப்படியே நின்றனர். 

எங்கும் செல்லாமல் இங்கிலாந்து வீரர்கள் அப்படியே நின்றனர். ரிவ்யூவில் நாட் அவுட் கொடுக்கப்பட்ட பின்பும் வீரர்கள் நகராமல் இருந்தது ஏன் என்று கேள்வி எழுந்தது.

இங்கிலாந்து வீரர்கள் இப்படி நகராமல் நின்றது சர்ச்சையானது. இதையடுத்து டிஆர்எஸ் ரிவ்யூவில் எல்பிடபிள்யூ விழுந்ததா என்று சோதனை செய்யப்பட்டது. 
ஆனால் இதில் பந்து அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் சென்றது. இதனால் ரஹானேவிற்கு விக்கெட் கொடுக்கப்படவில்லை.

ஆனால் பந்து கிளவுஸில் பட்டு சென்றது அடுத்த பந்தில்தான் தெரிந்தது. அதன்பின் ரஹானே அதே ஓவரில் அவுட்டாகிவிட்டார். இந்த நிலையில் இங்கிலாந்து அணி இழந்த ரிவ்யூ மீண்டும் அவர்களுக்கே கொடுக்கப்பட்டது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0