இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவிற்கு புதிய தலைவர்..  அதிரடி முடிவு.. செம மாற்றம்!

அடுத்தடுத்த அடுத்த வருட ஐபிஎல் குறித்தும், ஏலம் குறித்தும், 2022ல் புதிய அணியை சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்தனர்.

இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவிற்கு புதிய தலைவர்..  அதிரடி முடிவு.. செம மாற்றம்!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேட்டன் சர்மாவை நியமிக்க கிரிக்கெட் ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. நேற்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அமைப்பின் வருடாந்திர கூட்டம் நேற்று நடந்தது .இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது.கங்குலி - ஜெய் ஷா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் மூன்று முக்கியமான விஷ்யங்கள் குறித்து பேசினார்கள். அடுத்த வருடம் இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை டி 20 தொடர் குறித்து இதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த தொடருக்கு வரி விலக்கு கோருவது தொடர்பாகவும், இந்திய அணி தேர்வு தொடர்பாகவும் ஆலோசனை செய்ய உள்ளனர். அடுத்தடுத்த அடுத்த வருட ஐபிஎல் குறித்தும், ஏலம் குறித்தும், 2022ல் புதிய அணியை சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்தனர். அதேபோல் இந்திய அணியின் தேர்வுக்குழுவில் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யவும் இதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேட்டன் சர்மாவை நியமிக்க கிரிக்கெட் ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. நேற்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. தற்போது தலைவராக இருக்கும் சுனில் ஜோஷிக்கு மாற்றாக சேட்டன் சர்மா புதிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தேபாஷிஷ் மோகன்டி, அபே குருவில்லா ஆகியோரும் இந்திய அணியின் தெரிவுக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அடுத்த ஒருவருடம் எப்படி இந்திய அணியை தேர்வு செய்கிறார்கள் என்பது தீவிரமாக கண்காணிக்கப்படும்.

சேட்டன் சர்மா இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். இவர் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதேபோல் 65 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். தலைவர் பொறுப்பிற்கு அஜித் அகர்கர் விண்ணப்பித்து இருந்த நிலையில் சேட்டன் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0