என் மனைவியை இப்படி பார்க்க முடியவில்லை.. தலைமை பயிற்சியாளருக்கு வந்த சோதனை!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. 

என் மனைவியை இப்படி பார்க்க முடியவில்லை.. தலைமை பயிற்சியாளருக்கு வந்த சோதனை!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா - ஆஸ்திரேலிய தொடரில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது.

இதற்கு தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் மீது அந்நாட்டு ஊடகங்கள் குற்றம்சாட்டி எழுதிய நிலையில் அவர் மனம் வருந்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. 

ஆனால் அடுத்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிர்பார்க்காத வகையில் இந்தியா பதிலடி கொடுத்தது. இதனால் தொடரை இந்தியா வென்றது.

இந்த எதிர்பாராத தோல்வியால் ஆஸ்திரேலியா கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய அணியில் பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், வீரர்கள் மத்தியில் புகைச்சல் எழுந்துள்ளது.

மோசமான தோல்விக்கு அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மீது குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் வெளியானது. லாங்கர் தன் தனிப்பட்ட அழுத்தத்தை வீரர்கள் மீது காட்டுவதாகவும், தங்களை கட்டுப்படுத்த முயல்வதாகவும் வீரர்கள் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து பேசியுள்ள லாங்க, என் மீதான குற்றச்சாட்டுகளால் என் மனைவி வருத்தமடைந்துள்ளர். இது எனக்கு மிகவும் வலியை ஏற்படுத்துகிறது. வீரர்களுக்கு என்னிடம் ஏதேனும் குறை இருந்தால் நேராக என்னிடம் வந்து கூறலாம். என் பல வருட அனுபவத்தில் இது மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

like
1
dislike
0
love
0
funny
0
angry
0
sad
1
wow
0