இனி டி20-ல் வாய்ப்பு இல்லையா... கவாஸ்கரின் கணிப்பு.. ரசிகர்கள் கொந்தளிப்பு

குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் சுழற்பந்து வீச்சீல் சிறப்பாக ஆடி வருவதால் அஸ்வின், ஜடேஜா இருவரும் ஓரம் கட்டுப்பட்டதற்கு காரணமாகும். 

இனி டி20-ல் வாய்ப்பு இல்லையா... கவாஸ்கரின் கணிப்பு.. ரசிகர்கள் கொந்தளிப்பு

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தற்போது ஆட முழு ஃபார்மில் இருப்பதாகவும் டி20 அணியில் வாய்ப்பு கிடைக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார். 
ஒருநாள், டி20 போட்டிகளில் இடம் கிடைப்பதில்லை. இவருடன் இணைந்து ஆடி வந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு அவ்வப்போது வாய்ப்பு கிடைத்து வருகிறது.

குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் சுழற்பந்து வீச்சீல் சிறப்பாக ஆடி வருவதால் அஸ்வின், ஜடேஜா இருவரும் ஓரம் கட்டுப்பட்டதற்கு காரணமாகும். 

இந்திய அணியின் ஷார்ட் ஃபார்மட் போட்டிகளில் இவர்கள் இருவருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அஸ்வினுக்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என நினைக்கிறேன். ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 7வது இடத்தை உறுதி செய்துவிட்டார். 

ஜடேஜாவும் அணியில் உள்ளார். கடைசி 3 வரிசைகளில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது ஒரு ஸ்பின்னர், 2 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே களமிறக்க முடியும். இதனால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காது. என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 111 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அஸ்வின் 150 விக்கெட்களும், 46 டி20களில் 52 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை அஸ்வின் வெளிப்படுத்தி வருகிறார்.