பாதியில் வெளியேறிய பும்ரா.. ரெடியாக இருந்த கோலி.. அவசர அவசரமாக அணிக்குள் வரும் வீரர்!

நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக பும்ரா வெளியேறி உள்ளார். குடும்ப காரணங்களுக்காக பும்ரா வெளியேறி உள்ளார்.

பாதியில் வெளியேறிய பும்ரா.. ரெடியாக இருந்த கோலி.. அவசர அவசரமாக அணிக்குள் வரும் வீரர்!

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டிக்கு இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.

இதுவரை நடந்த மூன்று போட்டியில் இந்திய அணி 2 போட்டியில் வென்றுள்ளது. கடைசி போட்டியை வெல்ல வேண்டிய அல்லது டிரா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக பும்ரா வெளியேறி உள்ளார். குடும்ப காரணங்களுக்காக பும்ரா வெளியேறி உள்ளார்.

இதன் காரணமாக இந்திய அணியில் உமேஷ் யாதவ் இணைய உள்ளார். ஏற்கனவே இவர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணியில் இணைவதாக இருந்தது. ஆனால் இவர் பிட்னஸை நிரூபிக்க தாமதம் ஆனதால் இந்திய அணிக்குள் வரவில்லை.

இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் இவர் இந்திய அணியில் இணைவார். அதே சமயம் ஏற்கனவே அணியில் இஷாந்த், சிராஜ் ஆகியோர் உள்ளனர். எப்படியும் இரண்டு பாஸ்ட் பவுலர்கள், மூன்று ஸ்பின் பவுலர் மட்டுமே களமிறங்குவார்கள்;.

இதனால் உமேஷ் யாதவ் உண்மையில் அணியில் இணைவாரா அல்லது இருக்கிற வீரர்களை வைத்து கோலி களமிறங்குவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. நான்காவது டெஸ்ட் இந்திய அணிக்கு முக்கியமான டெஸ்ட் ஆகும். இதனால அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் என்கிறார்கள்.